Nov 17, 2012

ஹமாஸ் தலைமையகம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : கட்டிடங்கள் தரைமட்டம்: 8 பேர் பலி



காசா: இஸ்ரேல் நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் பாலஸ்தீனத்தில் காசா நகரில் ஹமாஸ் அரசு தலைமையகம் முழுமையாக சேதமடைந்தது. 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் இஸ்ரேல் 180 முறை வான் வழி தாக்குதல்களை நடத்தியது. இதுவரை காசா பகுதியிலிருந்து தீவிரவாதிகள் 580 முறை ராக்கெட்களை ஏவி தாக்குதல்களை நடத்தினர். இவற்றில் 367 ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலை தாக்கின. 222 ராக்கெட்டுகள் வானிலேயே

இடைமறித்து அழிக்கப்பட்டன. ‘காசா நகரில் உள்ள ஹமாஸ் அரசு தலைமையகம், உள்துறை அமைச்சகம், போலீஸ் அலுவலகம், தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடம் ஆகியவற்றை குறிவைத்து நேற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 8 தீவிரவாதிகள் இறந்தனர்Õ என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். காசா பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘கடந்த புதன்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் இறந்தனர். 345 பேர் காயமடைந்துள்ளனர்Õ என்றார். காசா நகரைச் சுற்றி உள்ள முக்கியமான சாலைகளை இஸ்ரேல் அரசு மூடியுள்ளது. அவை ராணுவ பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே முக்கிய அமைச்சர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு பேச்சு நடத்தினார். தாக்குதலை சமாளிக்க 75 ஆயிரம் ராணுவ வீரர்களை பணியில் ஈடுபடுத்த அமைச்சர்கள் அனுமதியளித்தனர். இஸ்ரேல் பிரதமரிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ‘இஸ்ரேல் தனது பாதுகாப்புக்காக தீவிரவாதிகளை தாக்கும் உரிமை உள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்கும்’ என்று கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...