May 22, 2012


முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 முதல் 49 வயதுவரை

உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.

ஒமேகா கொழுப்பு அமிலம்

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது.


இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வயதான பெண்களுக்கு

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.


சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது.

இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது.


ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.


மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...