அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் அண்ட் உமன்ஸ்
மருத்துவமனை இதுதொடர்பாக 4 ஆண்டுகால தொடர் ஆய்வு நடத்தியது. முதல்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரம் பெண்களின் மருத்துவ
குறிப்புகள் அலசி ஆராயப்பட்டன.
அடுத்த கட்டமாக இதில் இருந்து 65 வயதுள்ள 6 ஆயிரம் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டனர். தீமை பயக்கும் கொழுப்பு சத்து உணவுகளை அதிகம் சாப்பிட்டவர்களின் மூளை செயல்பாடுகள், நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருந்தது.
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு இருந்தால் இந்த பாதிப்புகளை தவிர்க்கலாம். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, தேவைப்பட்டால் சிகிச்சை பெற வேண்டியதும் அவசியம். ரெட்மீட், வெண்ணெய் ஆகியவற்றில் தீமை பயக்கும் கொழுப்புசத்து அதிகம் என்பதால் இதனை தவிர்ப்பது நல்லது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment