Aug 26, 2012

பாகிஸ்தானில் வெள்ளத்தில் 35 கிராமங்கள் மூழ்கின


லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால், லாகூரில் இருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள பஸ்ரூர் மற்றும் சியால்கோட் மாவட்டங்களில் சுமார் 35 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனினும், கனமழை காரணமாக அந்த கிராமங்களில் இருந்த மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்பட்டனர்.

மழை வெள்ளம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வெள்ளத்தில் 35 கிராமங்கள் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் முழுமையாக

அழிந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. பஸ்ரூர் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 1122 வாகனங்களில் மீட்பு படையினர் சுற்றி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...