*உடலில் இருந்து வெளியாகும் நீரை சமன் செய்வதற்காக தண்ணீர் பருகுகிறோம். ஒருவரது உடலில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது. மலம் வழியாக 200 முதல் 300 மி.லி. தண்ணீர்
வெளியேறுகிறது.
*சுவாசம் வழியாக 300 முதல் 400 மி.லி. நீர் வெளியேறுகிறது. வியர்வை மூலம் 300 முதல் 400 மி.லி. வெளியேறுகிறது. இதை சரிக்கட்டத்தான் நாம் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் பருக வேண்டியிருக்கிறது. கோடை காலத்தில் வியர்வை அதிகமாவதால் அதை ஈடுகட்டும் விதத்தில் பருகும் தண்ணீர் பொருட்களின் அளவை அதிகரிக்கவேண்டும்.
*ஒருவருக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்கும். அப்போது உட்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவினை அதிகரிக்க வேண்டும்.
*கூடவே உடல் உஷ்ணத்தை தவிர்க்கவும் தண்ணீர் அதிகம் தேவைப்படும். கோடை காலத்திலும், காய்ச்சல் ஏற்படும் காலத்திலும் அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும். இப்போது கோடைகாலம் என்பதால் வெயில் அனலாய் கொளுத்துகிறது. மதிய நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியவில்லை.
*இந்த வெயில் காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் டீஹைடிரேஷன் என்கிற நீர்ச்சத்தின்மை பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மூளை, இதயம், சிறுநீரகம் ஆகிய உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்.
*டீஹைடிரேஷன் ஆரம்ப நிலையில் இருந்தால் தண்ணீர் மற்றும் பழச்சாறு தேவையான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதனால், தண்ணீர் நிறைய குடியுங்கள். முக்கியமாக, அதை சுத்தமாக குடியுங்கள்.
*இந்த சீசனில் என்னென்ன பழங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள்.வெயிலில் அதிக நேரம் அலையாதீர்கள். அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் பின்பற்றினால் நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் பாதிப்புகள் வராது.
No comments:
Post a Comment