சருமத்தை பாதுகாக்க நமது உணவு பழக்ததை மாற்றி உடற்பயிற்சி செய்வதும் அவசியம். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம். சருமததை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழநதுவிடும. சுகாதாரமான வாழக்கைக்கு எளய வழிகளை பின்பற்றினாலே போதும.
சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால் தினமும் 15 நிமிடம் சூரிய ஒளியில் இருககலாம. சூரிய ஒளிக்கதிரிலிருந்து வைட்டமன் டி கிடைக்கிறது. சருமத்தை பாதுகாக்க மாய்ஸரைஸ் தினமும் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளி, காற்று, குளிர், அலர்ஜி சோப், வெப்பம ஆகியவற்றிலிருந்து மாய்ஸரைஸ் சருமத்தை பாதுகாக்கும.
குளியலுக்கு பிறகுதான் ப்ரதயேக க்ரீமையோ எண்ணையையோ தடவவேண்டும். கை, முகத்துக்கு கூடுதல கவனம் செலுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலனாலும சருமம் பாதிப்படையலாம். சருமத்துக்கு பொருத்தமான டை மற்றும பெர்பீயூமை உபயோகிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.
சருமம் நன்றாக இருப்பதோடு உடற்பயிற்சியினால் வயதும் தெரியாது. உடற்பயிற்சி உடலை வலமைப்படுத்தும், சருமம் சுருக்கமடையாமல் நன்றாக இருக்கும். தட்பவெப்ப மாற்றத்தாலும் சருமம் பாதிப்படையும. சருமத்துக்கேற்ற சூடான மற்றும் குளிர்ந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.
மேலும், வேகமாக எடை குறைப்பதை தவிர்க்க வேண்டும். வேகமாக எடை குறைப்பதால் சருமம் பாதிப்படையும். தேவையில்லாத டயட் மொத்த உடலையும் பாதிக்கச் செய்யும். குறுகிய காலத்தில் உடல் எடையை குறைப்பதன் மூலம் சருமம் சுருக்கமடையத் தொடங்கும். சத்தான உணவை சாப்பிடவேண்டும். உணவில் புரோட்டின் சத்து கட்டாயம் இருக்க வேண்டும்.
நாம் உணணும் உணவுகளிலும் அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடலில் கொழுப்பை சேர்க்கும். ஆனால் உடலுக்கு தேவையான புரோட்டின், வைடடமின் மற்ற தாதுப்பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். இது தோல்செல் பெருக்கத்துக்கு உதவும்.
தண்ணீர் அதிகமாக குடிக்கவில்லை என்றால் உடலில் தண்ணீர் சத்து குறைந்து சருமம் பாதிப்படைய ஆரம்பிக்கும். தண்ணீர் தான் நமக்கு மிகவும் முக்கியமானது. ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். டயட் இருந்தாலும் உடற்பயிற்சி செய்தாலும் கூடுதலாக தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக தேனீர், இயற்கை குளிர்பானம் மற்றும் பழச்சாறு, காய்கறிகள் சூப் குடிக்கலாம்.
ஆனால், காபி மற்றும் மதுபானம் குடித்தால் உடலிலுள்ள தண்ணீர் சத்தை குறைத்துவிடும். புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆழ்ந்த தூக்கமின்மையும் அதிக கவலையும் சருமத்தை பாதிக்கும்.
முதலில் முகத்தைத்தான் பாதிக்கும். உடலை விரும்பி பார்த்துக்கொண்டாலே உங்களது தோற்றம் பள பளபளப்பாக இருக்கும். முகத்தை பிரஷ் ஆக வைத்திருப்பதற்கு இப்போது நவீன பேஷ்வாஸ் நிறைய வந்துள்ளன. அதிலும் லெமன், ஆப்பிள், ஸ்ட்ராபெரி உட்பட பல்வேறு பழச்சாறு வாசனையுடன் லோசன் வந்துள்ளன. அவற்றில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் முகம் எந்த நேரமும் பிரஷ்சாக இருக்கும். முகத்தில் சுருக்கங்களும் வராது.
No comments:
Post a Comment