Aug 26, 2012

வெப்பத்தைத் தணிக்க சிறந்த வழிகளை தெரிந்து கொள்ள வேண்டுமா?


கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுவாக மோர், குளிர்பானங்களை தேடுகின்றோம். தர்பூசணி, எலுமிச்சை சாறு சர்பத் ஆகியவையும் அடங்கும்.
இதோடு வெள்ளரிக்காய், தண்டுக்கீரை மிகவும் சிறப்பு வாய்ந்தது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த வெள்ளரிக்காய் துண்டுகளை ரொட்டியில் வைத்து `சாண்வீச்' போன்று சாப்பிட்டு ஒரு கப் டீ குடித்தால் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தரும் என்பது இவர்கள் கருத்தாகும்.
தண்டுக் கீரையை சமைத்து சாப்பிடுவதும் உஷ்ணத்தை குறைக்கும். பழங்கள், காய்கறிகளில் நீர்சத்து அதிகம் இருப்பதால் இவற்றை கோடை காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிடுவதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் பயன் தராது என்கிறார்கள்.







No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...