ஆப்பிரிக்காவிலுள்ள
காங்கோ காடுகளில் புதியவகை குரங்கு இனத்தை ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். லெசுலா என்று அழைக்கப்படும் இவ்வகை குரங்குகள் வளை
வான பழுப்பு நிற மூக்கினை கொண்டதாகவும், முகம் முழுக்க செம்பட்டை ரோமம்
உடையதாகவும் உள்ளது.
கடந்த 28 ஆண்டுகளில்
கண்டுபிடிக்கப்பட்ட 2-வது அரிய வகை குரங்கு இதுவாகும். லோமாமி ஆறுபாயும்
காட்டுப்பகுதியில் லெசுலாவை கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய
டி.என்.ஏ. பரிசோதனையில் உலகின் பழமையான குரங்குகளில் ஒன்றான குவினான்
கூட்டத்தை சேர்ந் தது என தெரிய வந்தது. இந்த ஆராய்ச்சியின் மூலம் உலகின்
பழமையான ஆப்பிரிக்க குரங்கு வகைகளின் பரிணாம மாற்றங்கள் குறித்த அரிய
தகவல்கள் வெளியாகி இருப்பதாக டாக்டர் ஜான்ஹர்ட் கூறினார்.
ஓபாலா
நகரில் உள்ள ஆரம்ப பள்ளியின் நிர்வாகி ஒருவர், லெசுலா வகை
குரங்குக்குட்டியை கூட்டில் அடைத்து வளர்த்து வந்தார். அதை அவரிடமிருந்து
விடுவித்து ஆய்வு செய்து வந்தோம். இதே போல் காட்டில் வசிப்பவர்கள் பலரும்
இவ்வகை குரங்குகளை வளர்ப்பதை அறிந்து லோமாமி காடுகளில் சுற்றி அலைந்து
தேடிய போது லெசுலா குரங்குகளை காண முடிந்தது.
லோமாமி
ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப்பகுதிகள் மற்றும் லோமாமி தேசிய பூங்கா
ஆகியவற்றை பாது காக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, லெசுலா குரங்கு வகைகளின்
இனப் பெருக்கத்துக்கேற்ற சூழலை உருவாக்கித்தர அரசு முடிவெடுத்துள்ளது என
அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment