Sep 14, 2012

வேற்று கிரகவாசிகள் பல கிரகங்களில் வாழ்கின்றனர்: விஞ்ஞானிகள் தகவல்


வேற்று கிரகவாசிகள் பல கிரகங்களில் வாழ்கின்றனர்: விஞ்ஞானிகள் தகவல்             
லண்டன், செப். 12-

பூனையை போன்று மனிதர்கள் வாழ தகுதியுள்ள பல கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை மிக வெப்பமாகவும், மிக குளிராகவும் உள்ளன. அவற்றின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அவை உறைந்த நிலையிலும், திரவ நிலையிலும் உள்ளன. கிரகங்களின் மேற்பரப்பில் உறைந்து கிடக்கும் தண்ணீர் அங்குள்ள நட்சத்திரங்களின் நேரடி வெப்பத்தின் மூலம் உறைந்து அங்கு நிலத்தடி நீராக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலும், இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள அபர்தீன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜான்பர்னீல் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள நிலத்தடி நீரில், பூமியில் இருப்பதை போன்று நுண்ணுயிர் உயிரினங்கள் வாழும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உயிரினங்கள் தண்ணீர் மூலம் தோன்றி பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக மாறியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி பார்த்தால் தண்ணீர் இருக்கும் பல புதிய கிரகங்களில் அயல் கிரகவாசிகள் இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...