Sep 14, 2012

அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு: விமானத்தை கடத்தியவர்களின் ஆன்லைன் வீடியோ வெளியீடு



அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு: விமானத்தை கடத்தியவர்களின் ஆன்லைன் வீடியோ வெளியீடுதுபாய், செப். 14-

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு விமானத்தை கடத்தியவர்களின் வீடியோவை அல்-கொய்தா இணைய தளத்தில் வெளியிட்டது.

அல்கொய்தா தீவிரவாதிகள், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி நியூயார்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரத்தின் மீது விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.



இதற்கிடையில் விமானத்தை கடத்திய 19 பயங்கரவாதிகளில் இரண்டு பேரின் பேச்சு அடங்கிய வீடியோவை அல்-கொய்தா நேற்று இணையதளத்தில் வெளியிட்டது.

சலிம்-அல்-ஹஸ்மி, கலித்-அல்-மிதார் ஆகிய இருவரின் ராணுவ உடை, துப்பாக்கி, பேச்சுகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இவர்களுக்கு பின்புறம் இருந்த இஸ்லாமிய காலண்டரில் ஏப்ரல் 26, 2001 என்ற தேதி தெளிவாக தெரிகிறது.

அந்த வீடியோவில் மிதார் பேசுகையில், அரபு தலைவர்கள் தங்கள் நாட்டை காட்டிக் கொடுத்து, மெக்கா மற்றும் மதினா ஆகிய புனித ஸ்தலங்களில், அமெரிக்க கிறிஸ்தவர்களை தங்க அனுமதித்து விட்டனர் என்று கூறுகிறான். அரேபிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கர்களை வெளியேற்றுவோம் என்கிறான் ஹஸ்மி. இது அமெரிக்காவிற்கு எதிரான புனிதப் போர் என்று கூறுகிறான். 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...