- Friday, 19 October 2012
இது தொடர்பில் அருணகிரிநாதர் தெரிவிக்கையில் 'நித்தியானந்தா இன்னமும் சில நாட்களில் தானாக ராஜினாமா செய்யவிருந்தார். ஆனால் அதற்குள் நானே நீக்கிவிட்டேன். பொதுமக்கள், இந்த நியமனத்தை விரும்பவில்லை. அரசு விரும்பவில்லை. நீதிமன்றமும் விரும்பவில்லை. எனினும் நித்தியானந்தாவை நீக்குமாறு அழுத்தங்கள் எதுவும் வரவில்லை. சுயமாகத்தான் இந்த முடிவை எடுத்தேன் என பிபிசி தமிழோசைக்கு கூறியுள்ளார்.
இதேவேளை தான் இளைய பீடாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நித்தியானந்தா, தன்னால் மதுரை ஆதீனத்திற்கு எவ்வித பிரச்சினையும் வருவதை தான் விரும்பவில்லை எனவும், தனக்கு திருஞான சம்பந்தர் மீது அளவு கடந்த மரியாதையும் பக்தியும் உண்டு எனவும் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனமான தொடர அருணகிரி நாதருக்கு தகுதியில்லை எனவும் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தது செல்லாதது எனவும் தமிழக அரசு நீதிமன்றில் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்திருந்தது.
தற்போது நித்தியானந்தாவை பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து, அருணகிரிநாதர் மதுரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நித்தியானந்தாவை நியமனம் செய்ததில் இருந்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரை இப்போது ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறேன். எனவே நித்தியான்ந்தாவின் சீடர்களால் எனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இதேவேளை நித்தியானந்தா நீக்கப்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து மதுரை ஆதீனத்தில் தங்கியிருந்த அவரது சீடர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் மீது செருப்பு வீசி தாக்குதலும் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் மதிரை ஆதீனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கிற வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததும் மதுரை ஆதீனம் ஒரு வேளை பதவி இழக்க நேர்ந்தால் அந்த இடத்தில் உடனடியாக நித்தியானந்தா அமரும் சூழல் உருவாகிவிடும், இது நடக்கக் கூடாது என்று, அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் வாதடியதும் குறிப்பிடத் தக்கது. மேலும் அருணகிரி தரப்பு வழக்கறிஞர் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டதும் குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment