Oct 20, 2012

கிழக்கில் கரையொதுங்கும் மீன்களை உண்பதை தவிர்க்கவும்!- கிழக்கு பல்கலைகழகம் அறிவிப்பு



கிழக்கில் கரையொதுங்கும் மீன்களை உண்பதை தவிர்க்கவும்!- கிழக்கு பல்கலைகழகம் அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,
காத்தான்குடி உட்பட கிழக்கு கரையோரத்தில் கரையொதுங்கும் மீன்களை உண்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கிழக்குபல்கலைகழக விலங்கியல் திணைக்கள போதனாசிரியர் ஜே.எம்.ஹரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் மீன்களை பரிசோதனை செய்யவென குறித்த பிரதேசத்திற்கு இன்று நண்பகல் கிழக்கு பல்கலைக்கழக
விலங்கியல் திணைக்கள ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் விஜயம் செய்தபோதே இதனைத் தெரிவித்தனர்.
நீர் மாதிரிகளின் தரம் மற்றும் கரையொதுங்கிய மீன்களின் தசை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் முடிவுகள் ஆராய்ச்சிகளின் முடிவிலேயே அறிவிக்க முடியும்.
எனவே அதுவரை இம் மீன்களை உண்ணுவதை தவிர்க்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...