காதல் தோல்வியால் கின்னஸ் சாதனை புரிந்த உலகின் பருமனான நபர்!
[Tuesday, 2012-10-16
|
தனது பாரிய உடல் நிறைக்கு காதல் தோல்வியே காரணமென உலகின் மிகவும் பருமனான
நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த பிரித்தானியாவைச்
சேர்ந்த போல் மாஸன் (50 வயது) தெரிவித்தார்.
|
காதல் தோல்வியால் இராட்சத உருவத்தைப் பெற்ற அவர், தற்போது பிறிதொரு பெண்
மீது ஏற்பட்ட காதலால் நிறையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக
ஈடுபட்டுள்ளார்.2009 ஆம் ஆண்டில் 980 இறாத்தல் நிறையுடன் நடக்க முடியாது சக்கர நாற்காலியை தஞ்சமடைந்திருந்த அவர், தனது நிறையை 518 இறாத்தலாக குறைத்து சக்கர நாற்காலியை விட்டு எழுந்து நடமாடும் வல்லமையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தான் 21 வயதாக இருந்த போது தன்னை விட 18 வயது கூடிய பெண்ணொருவரை (39 வயது) சந்தித்து காதல் கொண்டதாக தெரிவித்த போல் மாஸன், நான் அவளை சார் என செல்லமாக அழைப்பது வழக்கம். என் நினைவுகள் ழுவதும் அவளே நிறைந்திருந்தாள். அவள் என் வாழ்க்கை முழுவதும் துணை வருவாள் என நம்பியிருந்தேன் என்று கூறினார். அவளுக்கு ஒரு வீடு இருந்தது. நானும் அவளும் அங்கேயே வசித்து வந்தோம். நான் அந்த வீட்டை மெருகுபடுத்த பண உதவி செய்தேன். ஆனால் அவள் எனது கனவுகள் அனைத்தையும் ஒருநாள் பொய்யாக்குவாள் என நான் ஒருபோதும் எதிர் பார்த்திருக்கவில்லை என போல் மாஸன் மேலும் தெரிவித்தார். "1986 ஆம் ஆண்டில் எனக்கு 26 வயதாக இருந்த போது, அவளுக்கு பிறிதொரு இளைஞனுடன் காதல் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தை அவளிடம் நேரடியாகவே கேட்டேன். ஆனால் அவள் அதற்கு எதுவித மறுப்பும் தெரிவிக்காமல் அந்த இளைஞனையே திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டு போய்விட்டாள்" என தெரிவித்த போல் மாஸன், காதல் தோல்வியை மறக்க உணவுக்கு அடிமையானதாக கூறினார். நான் அச்சமயம் நாளொன்றுக்கு 24 மணி நேரம் என்ற வகையில் தினசரி உணவு உண்டு வந்தேன். இந்த உணவு உண்ணும் பழக்கத்தால் இரவு நேரத்தில் உறங்கக்கூட முடியாது நான் சிரமப்பட்டு வந்தேன் என அவர் கூறினார். எனது துன்பகரமான வாழ்விலும் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவளே எனது நிறையை குறைக்க எனக்கு தூண்டுதலாக இருந்தாள். அவளும் என்னைப் போல் ஒழுங்கீனமான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளாள். அவளுக்கு மகன் ஒருவன் இருக்கிறான். எனக்கு ஆதரவளிக்க விரும்புவதாக அவள் தெரிவித்துள்ளாள் என்று கூறிய போல் மாஸன், அவள் மிகவும் கூச்ச சுபாவடையவள் என்பதால் அவளது பெயரை வெளியிட விரும்ப வில்லை. ஒருநாள் எனது நிறையை சாதாரண அளவுக்கு குறைத்து அவளுடன் வாழ்வைப் பகிர்ந்து கொள்ள முடியும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார். |
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment