- Saturday, 20 October 2012

இதில் வெளிப்படையாகத் தெரியும் விடயம் என்னவென்றால் பென்குயின்களுக்கு இரு இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாது என்பதாகும்.
ஆனால் அண்மையில் நேஷ்னல் ஜியோகிராஃபிக் வெளியிட்ட புகைப்படங்கள் இக்கருத்தை பொய்யாக்கியுள்ளது.

ஏனெனில் பென்குயின்கள் தமது அபார நீந்து திறனால் கடலில் இருக்கும் ஐஸ்கட்டி அல்லது வெண்பனியால் நிரப்பப் பட்ட தரையை நோக்கிப் பாய்ந்து அந்தரத்தில் சில வினாடிகள் பறந்தவாறே தரையை அடையும் திறன் அதற்கு உள்ளது என்பது அதிசயமாகும்.
விமான இயக்கவியல் (Aerodynamic phenomenon) எனும் பௌதிகவியற் கோட்பாடே பறக்க முடியாத இந்தப் பறவைகளில் பறக்கும் அதிசயத்தை நிகழ்த்தக் காரணமாக உள்ளது. அதாவது பென்குயின்கள் நீருக்கடியில் தமது இறக்கைகளின் இடவெளிகளில் இருந்து சிறியளவான வாயுக் குமிழிகளை வெளிவிடுவதன் மூலம் மிகவும் விரைவாக ஒரு ராக்கெட்டைப் போல் நீந்துகின்றன.

இதே உத்தி மனிதனால் தயாரிக்கப் பட்ட நீர்மூழ்கிக் கப்பலாலும் பாவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பென்குயின்களின் இந்தத் தனித் திறமையால் அது ஏனைய நீர் வாழ் உயிரினங்களை விட விரைவாக நீரில் நீந்த வல்லது என்பதுடன் இதில் பெறும் உந்தத்தைக் கொண்டு பல மீற்றர் உயரத்துக்கும் குறிப்பிட்டளவு தூரத்துக்கும் நீரிலிருந்து குதித்து சில விநாடிகள் அந்தரத்தில் பறக்கவும் செய்கின்றன
No comments:
Post a Comment