கணனி
உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக்
கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது
வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.
இதுவரை
கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே
இந்த விடயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட்
கொஞ்சம் தாமதமாக இந்த விடயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன்
பயனர்களுக்கு தந்துள்ளது. அந்த வகையில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் கொண்ட
கணனியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில்
கீழே உள்ள இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை
(Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது
64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32
பிட்டை தரவிறக்கம் செய்யவும்.
Next
என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license
terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு
Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணனியில் இன்ஸ்டால் ஆகும்.
இன்ஸ்டால்
ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள்
Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து
"Apply display language to welcome screen and system accounts" என்பதை
கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு
தான் இப்போது உங்கள் கணனியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும். இனி
உங்கள் கணனி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும்
தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விடயங்கள் தமிழில் இருக்கும்.
இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணனியில் அடிப்படை விடயங்களை செய்ய முடியும்.
மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட்
மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும்
என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம்
>> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய
விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி
ஒன்றை தெரிவு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control
Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு
வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக்
செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a
Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment