May 11, 2013

கணணியில் மின் சக்தியை மிச்சப்படுத்த வேண்டுமா..?



கணணியில் மின் சக்தியை மிச்சப்படுத்த வேண்டுமா..?
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம். மடிக்கணணிகளில் புதிதாக பற்றரிகள் கூடுதலான நாட்களுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.

இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு என்பதனை இங்கே விரிவாகப் பார்க்கலாம். இவற்றைக் கையாள்வதனை நீங்கள் ஏற்கனவே அறிந்தவராக இருந்தாலும், கீழே தந்துள்ள குறிப்புகளைப் படித்து மீண்டும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

1. ஸ்லீப் மோட்(Sleep mode): இது ஒருவகை மின்சக்தி மிச்சப்படுத்தும் வழி. இதன் இயக்கம் டிவிடியில் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் Pause அழுத்தித் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்பாகும். கணணியின் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படும்.
இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் மென்பொருள் இயக்கங்களும், திறந்திருக்கும் டாகுமெண்ட்களும் நினைவகத்தில் வைக்கப்படும். மீண்டும் இதனைச் சில நொடிகளில் இயக்கி விடலாம். அடிப்படையில் இது Standby செயல்பாட்டினைப் போன்றதாகும். குறைவான காலத்திற்கு கணணியின் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும் எனில் இதனை மேற்கொள்ளலாம்.

2. ஹைபர்னேட்(Hibernate): இதனை மேற்கொள்கையில் திறந்திருக்கும் உங்களுடைய டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கில் சேவ்செய்யப்படுகின்றன. கணணி shut down செய்யப்படுகிறது.
இந்த ஹைபர்னேட் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் ஸீரோ மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. மீண்டும் இதற்கு மின்சக்தி அளிக்கப்படுகையில் அனைத்தும் விட்ட இடத்திலிருந்து இயக்க நிலைக்கு வருகின்றன. அதிக நேரம் பயன்படுத்தப் போவதில்லை எனில், உங்கள் கணணியினை குறிப்பாக மடிக்கணணியினை இந்த நிலைக்கு மாற்றலாம்.

3. ஹைப்ரிட் ஸ்லீப்(Hybrid Sleep): ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இணைந்ததுவே ஹைப்ரிட் ஸ்லீப் ஆகும். இது பொதுவாக டெஸ்க்டொப் கணணிகள் மட்டுமே பயன்படுத்தும் வசதி.
இந்த நிலையை மேற்கொள்கையில் திறந்து பயன்படுத்தக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்களும், சார்ந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ஹார்ட் டிஸ்க் மற்றும் நினைவகத்தில் வைக்கப்படும். உங்கள் கணணி மிகக் குறைந்த மின்சக்தியில் உறங்கிக் கொண்டிருக்கும்.
நீங்கள் மீண்டும் வேலையைத் தொடங்க எண்ணி இயக்கியவுடன் மிக வேகமாக இவை பயன்பாட்டிற்குக் கிடைக்கும். டெஸ்க்டொப் கணணிகளில் இது மாறா நிலையில் இயங்கும்படி வைக்கப்பட்டுள்ளது. மடிக்கணணியில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் டெஸ்க்டொப் கணணியை எப்போது ஸ்லீப் மோடில் போட்டாலும், அது உடனே ஹைப்ரிட் ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும்.
ஹைப்ரிட் ஸ்லீப் மோட், டெஸ்க்டொப் கணணிகளுக்கு ஏற்றதாகும். மின்சக்தி கிடைக்கும்போது, விண்டோஸ் இயக்கம் மெமரியை விரைவாக அணுக இயலவில்லை என்றால், உடனே ஹார்ட் டிஸ்க்கிலிருந்து கோப்புகளையும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்ளும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...