நிலநடுக்கம் - வீடு ஆடினாலும் ஆபத்து இல்லை!
நிலநடுக்கம்
ஜப்பானில் ஏற்பட்டது, சுமத்ராவில் ஏற்பட்டது என்றுதான் இத்தனை நாளும்
செய்திதாள்களில் படித்து வந்தோம். இனி அப்படி இருக்க முடியாது. காரணம்,
தமிழகத்தின் சென்னை, கோவை பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள
பகுதிகளாகவும், மிதமான அபாயம் என்கிற 3-வது நிலை பட்டியலில் இருப்பதாகவும்
எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அந்த
வகையில், தற்போது ஐந்து மாடிக்கு மேல் கட்டப்படும் கட்டடங்கள்
நிலநடுக்கத்தைத் தாங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டி ருக்கிறதா என்பதை ஆய்வு
செய்த பிறகுதான், தற்போது பிளான் அப்ரூவலே தருகிறார்கள். ஐந்து மாடிகளுக்கு
மேல்தான் என்றில்லை; பொதுவாகவே நாம் கட்டும் வீடுகள்நிலநடுக்க அதிர்வுகளைத் தாங்கக் கூடியவைகளாக அமைப்பதே நல்லது. நில அதிர்வுகளைத் தாங்கும் வீடுகளை எப்படி அமைப்பது..? என சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் பிரிவின் டீன் எம்.சேகரிடம் கேட்டோம். அவர் கொடுத்த முக்கியமான சில டிப்ஸ்கள் இனி..!
முதலில் நாம் கவனமாக இருக்க வேண்டியது, எந்த சூழ்நிலையிலும் செங்கல், கம்பி, சிமென்ட் போன்றவற்றின் தரத்தில் விட்டுக் கொடுக்க கூடாது.
செங்கல் கட்டடம் எனில் நான்கு அடி உயரத்துக்கு ஒரு சுற்று என்ற வகையில், ஒரு மாடி கட்டடத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு சுற்றாவது கான்க்ரீட் பெல்ட் அமைக்க வேண்டும்.
கான்க்ரீட் கட்டடங்களில் தூண்களும் உத்திரமும் சேருமிடத்தில், அவற்றில் பிணையப்படும் 'ரிங்’ எனப்படும் கம்பி வளையங்கள் வழக்கத்தைவிட நெருக்கமாக இருக்க வேண்டும். உதாரணமாக 5 அங்குலத்துக்கு ஒரு 'ரிங்’ பொருத்தப்படுகிறது எனில், குறிப்பிட்ட ஜாயின்ட்களில் 4 அங்குலத்துக்கு ஒரு 'ரிங்’ பொருத்தப்பட வேண்டும்.
20, 25 அடுக்குகள் என மிக உயரமான கட்டடங்களில் தூண்களுக்கும் உத்திரங்களுக் கும் இடைப்பட்ட பகுதியை செங்கல்லை கொண்டு மட்டும் சுவர் அமைக்காமல், இடையிடையே கான்க்ரீட் சுவர் அமைக்க வேண்டும். அது மட்டுமல்ல, கட்டடத்தின் அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதி வரைக்கும் ஷியர்வால் (sலீமீணீக்ஷீஷ்ணீறீறீ) எனப்படும் கான்க்ரீட் சுவரை அமைக்க வேண்டும். லிஃப்ட் அமைக்கப்படும் இடத்தில் லிஃப்ட்டைச் சுற்றிலும் ஷியர்வால் அமைக்கலாம். நிலநடுக்க அதிர்வின் விசை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் இருக்கும் என்பதால், அந்த விசையை இத்தகைய ஷியர்வால் சமன்படுத்தி கட்டடம் விரிசல் விழாமல் தடுக்கும்.
ஐந்து மாடி, பத்து மாடி என மிக உயரமான கட்டடங்களில் 'டேம்பர்’ (பீணீனீஜீமீக்ஷீ) அமைப்பது பாதுகாப்பை அதிகப்படுத்தும். 'டேம்பர்’ என்பது ஷாக் அப்ஸர்வர் ஸ்பிரிங் போன்று நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டது. இதனை உத்திரங்களின் எதிரெதிர் முனைகளுக்கு இடையே பொருத்துகிறபோது நிலநடுக்க அதிர்வின் விசைகளை பிரித்துக் கொடுத்து
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா