ரமலான்
மாதம் என்பதால் இரவு தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த
போது மின்னல் தாக்கி 10 பலியான சம்பவம் வங்கதேச நாட்டில் துக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ரமலான் மாதம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் முஸ்லிம்கள் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்.
இதற்கிடையே
வங்கதேசத்தில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று சியால்ஹெட் மாவட்டத்தில்
தொழுகையை முடித்துக்கொண்டு ஏராளமானோர் மழையில் வீடு
திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் தாக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா