Aug 12, 2012

பெண்ணின் காதுக்குள் 5 நாட்கள் குடியிருந்த எட்டுக்கால் பூச்சி



சீனாவில் பெண்ணின் காதுக்குள் 5 நாட்கள் குடியிருந்த எட்டுக்கால் பூச்சியை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் ஹூனான் மாகாண தலைநகர் சங்ஷா. இங்கு வசிக்கும் திருமதி லீ என்ற பெண், காது நமைச்சலில் கடந்த 5 நாட்களாக அவதிப்பட்டார்.
நமைச்சல் அதிகமானதால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு லீயின் காதுக்குள் என்ன பிரச்னை என்று கமெரா மூலம் மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது, 4 கண்களுடன் எட்டுக் கால் பூச்சி இருப்பது தெரியவந்தது.
அதனை உடனடியாக வெளியேற்ற முடிவு செய்து, முதலில் இடுக்கி மூலம் பூச்சியை பிடித்து வெளியில் இழுக்கலாமா என்று நினைத்தனர். அப்படி செய்தால் லீயை கடித்து விடும் என்று அந்த திட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் சலைன் திரவத்தை காதுக்குள் ஊற்றியதும், சிறிது நேரம் கழித்து எட்டுக்கால் பூச்சி வெளியில் வந்தது. அதை பார்த்து லீ நிம்மதி பெருமூச்சி விட்டார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், லீ தனது வீட்டை சீரமைத்துள்ளார். தூங்கும் போது காதுக்குள் பூச்சி சென்றது தெரியவில்லை. அரிப்பு ஏற்பட்ட போது நல்லவேளையாக அவர் காதுக்குள் குடையாமல் விட்டுள்ளார். அதனால் பூச்சி கடியில் இருந்து தப்பித்து விட்டார். காதை குடைந்திருந்தால் பிரச்னை பெரிதாகி இருக்கும் என்றனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், காதுக்குள் பூச்சி புகுந்து விட்டால் குச்சி போன்ற எந்த பொருளை பயன்படுத்தி குடைய கூடாது. உடனடியாக ஆலீவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை காதுக்குள் ஊற்ற வேண்டும். அதில் மூச்சு திணறி பூச்சி வெளியேற வாய்ப்பு உண்டு. பூச்சி வெளியேறி விட்டாலும், மருத்துவர்களை பார்ப்பது நல்லது என்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...