Aug 12, 2012

ரமலான் மாதம் என்பதால் இரவு தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 10 பலியான சம்பவம் வங்கதேச நாட்டில் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ரமலான் மாதம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் முஸ்லிம்கள் இரவு நேர வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்.
இதற்கிடையே வங்கதேசத்தில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று சியால்ஹெட் மாவட்டத்தில் தொழுகையை முடித்துக்கொண்டு ஏராளமானோர் மழையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் தாக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...