Aug 12, 2012

ஐ பேட் மற்றும் ஐ போன் வாங்குவதற்காக தனது சிறுநீரகத்தை 9 பேர் உதவியுடன் சீன மாணவன் சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளான்.
வாங் என்ற பெயருடைய இந்த மாணவன் அன்ஹுயி மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தான்.
இவன் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரலில் இவனது சிறுநீரகத்தில் ஒன்று அகற்றப்பட்ட பின் மற்றைய சிறுநீரகமும் செயலிழந்து மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான்.
இந்த சிறுநீரகம் அகற்றப்பட்டதற்கான விசாரணையில், ஐ பேட் மற்றும் ஐ போன் சாதனங்கள் வாங்குவதற்காக இணையதள சாட்டிங்கின் மூலம் 9 புரோக்கர்களை சந்தித்துள்ளான்.
இவர்கள் மூலமே சிறுநீரகத்தை 22, 000 யுவானுக்கு விற்றதாக தெரிகிறது. இந்த தகவல் பொலிஸாருக்கு தெரிய வர அந்த 9 நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இவர்கள் மீதான விசாரணைக்கு பின்பு தண்டனை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...