Aug 12, 2012

சென்னையை கலக்கப்போகும் உயிருள்ள அனகோண்டா பாம்புகள்..!

சென்னையை கலக்கப்போகும் உயிருள்ள அனகோண்டா பாம்புகள்..!


பா‌ம்பு வகைக‌ளி‌ல் ‌மிக‌ப்பெ‌ரியது அனகோண்டா. ‌இவற்றை சி‌னிமா‌விலேயே பா‌ர்‌த்‌து பழ‌க்க‌ப்ப‌ட்டிருக்கிறோம். ஆனால் நே‌‌ரி‌ல் பா‌ர்‌க்க அ‌ரிய வா‌ய்‌ப்பு ‌சென்னையில் கிட‌ை‌க்கப்போகிறது.
கி‌‌ரீ‌ஸ் நா‌ட்டி‌ல் இரு‌ந்து கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட ஐந்து அனகோ‌ண்டா பா‌ம்புக‌ள் சென்னை முதலை பண்ணையில் வளர்க்கப்பட உள்ளன.
தண்ணீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினம் அனகோண்டா. அதிக நேரம் தண்ணீரில்தான் கிடக்கு‌ம் எ‌ன்பதா‌ல் அதற்கு ஏற்ப முதலை பண்ணையில் வசதிகள் ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டு வருகின்றன.
எப்போதாவதுதான் சாப்பிடும் அனகோண்டாவு‌க்கு வாரத்துக்கு ஒருமுறை உணவு அளிக்கப்படுகிறது. அனகோண்டாவை பராமரிக்க பாம்பு பண்ணையை சேர்ந்த பணியாளருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வெளிநாட்டில் இருந்து ப‌‌யி‌ற்‌‌சியாள‌ர்க‌ள் வ‌ந்து‌ள்ளன‌ர்.
மெ‌ல்ல மெ‌ல்ல இ‌ங்கு‌ள்ள சீதோஷ்ண நிலையை அனகோண்டாக்கள் ஏற்று வரு‌கிறது. முழுமையாக இ‌ங்கு‌ள்ள சீதோஷ்ண நிலைக்கு மாறிய பின்னர் செப்டம்ப‌ர் முதல் பொதுமக்களின் பார்வைக்கு அனகோண்டாக்கள் வைக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...