Aug 12, 2012

மனிதனைத் தின்னும் சுறா மீன்கள்

பிரான்சிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடலில் ரியூனியன் தீவுக்கு அருகே மனிதர்கள் தொடர்ந்து சுறாமீன்களால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் 22 வயது இளைஞன் ஒருவனின் கால்களை சுறாமீனின் கூரிய பற்கள் பதம் பார்த்து விட்டன.
மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார்.
தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து வருவதால் சுறா மீன்களை பிடித்துக் கொல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரி, 300 பேர் கூடி போராட்டம் நடத்தினர்.
மாகாணத் தலைவர் தியரி ராபர்ட் இப்போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து இனிமேல் சுறாமீனை பிடிக்கும் மீனவர் ஒவ்வொருவருக்கும் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் கடல்சார்ந்த பகுதிகளுக்கான பிரெஞ்சு அமைச்சர் விக்டோரின் லூரெல் கூறுகையில், சுறாமீன் பாதுகாக்கப்படும் கடல் உயிரினம் என்பதால் அதனைப் பிடிப்பதும் கொல்வதும் குற்றமாகக் கருதப்படும் என்றார்.
சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும், விஞ்ஞானிகளும் மீன் மனிதரைத் திடீரென்று தாக்குவதன் காரணத்தை ஆராய வேண்டும் என்றனர்.
மேலும் எஸ்ஸெம்லாலி என்பவர், Bull Shark எனப்படும் இந்த வகை சுறா மீன்கள் ஆழ்கடலுக்குள் போகாது. கரையோரத்தில் மட்டுமே இருக்கும். எனவே தான் கரையோரமாக ஆழமில்லாத கடலில் மீன் பிடிப்பவர்களையும், நீந்திக் குளிப்பவர்களையும் தாக்குகின்றன என்றார்.
கடலின் சூழலமைப்புக்கு இந்த வகை சுறாக்கள் மிகவும் இன்றியமையாத ஒன்று. இதனைக் கொல்வதால், கடலின் மொத்த சூழலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மட்டும் இந்த சுறாவின் தாக்குதலுக்கு மூன்று பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...