May 12, 2012

பெண்களுக்கான உடற்பயிற்சி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பெண்களை காலம் காலமாக பூ, ரோஜா, பட்டு, மெல்லினம், மென்மை, தங்கம் என்று மிக மிக மெல்லிதாக வர்ணித்தே வைத்திருந்து விட்டார்கள். அதனாலேயே என்னவோ பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் வாய்ப்பினை வழங்காமலேயே ஆணுலகம் பத்திரமாக பார்த்து கொண்டது. இதற்கு அடிப்படையில் உடம்பு ரிதியாக ஒரு காரணம் இருப்பதாகவும் உலகத்தினர் நம்பியும் வந்தனர். பெண்கள் உடல் ரிதியில் உறுதி இல்லாதவர்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை. பெண்களில் பலரும்கூட அப்படித்தான் பொய்யாக நம்பிக் கொண்டிருந்தனர்.


ஆனால் உண்மையில் பெண் ஆணைவிட உடலில் உறுதிகொண்டவள், ஒரு குழந்தையையே பெற்றெடுக்கும் உடல் வலிமையை பெற்றவள் பெண், அதற்கேற்ப அவளின் உடல் உறுப்புகள், இடுப்பு எலும்புகள் எல்லாம் அமையப் பெற்றிருக் கிறது என்பதே உண்மை.

*

இந்த உண்மை உணர்ந்த பல பெண்கள் இன்று ஆணிற்கு நிகரான பல பணிகளை நிகழ்த்துகின்றனர். இன்னும் அவர்கள் உறுதிபெற உடற்பயிற்சி கை கொடுக்கும்.

***

பெண்கள் உடல் உறுதி பெற:


*

என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


*

உடம்பு மெலிவா:

*

சில பெண்கள் ஒடிந்து விழுவதுபோல கொடியிடையாக இருப்பார்கள். இவர்கள் தினமும் உடற்பயிற்சியினை மேற்கொண்டு, நல்ல பசியெடுத்து சத்தான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடம்பு உறுதியாவதுடன் ஓடிந்து விழும் நிலையிலிருந்து மீள்வார்கள். இவர்கள் எடையும்கூடி உடம்பும் உறுதி பெறும்.


***

நவீன உடற்பயிற்சி:

*

ஏரோபிக்ஸ் என்கிற உடற்பயிற்சிகள் இன்று நவீனமாக நடைமுறையில் உள்ளது. இதனை பயன்படுத்தி உறுதியான உடம்பினை மிக விரைவில் பெறலாம். இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் என்னவெனில் இதனை நவீன உடற் பயிற்சி கூடங்களில் போய்தான் பயிற்சி பெற வேண்டும். இல்லையெனில் வசதி வாய்ப்புகள் இருந்தால் வீட்டில் வாங்கி பயன் படுத்தலாம். உடற்பயிற்சிக்கு என்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் சைக்கிள் ஓட்டுவது, வேகமாக நடத்தல், மெதுவாக ஓடுதல் டிரெல்மில் (டு) ரோலிங் மெஷின், ஸ்டெப்பர் போன்ற பயிற்சிகள்தான் ஏரோபிக்ஸ் பயிற்சிகளாகும். இதனை தொடர்ந்து பெண்கள் மேற்கொண்டால் உடம்பினை எளிதாக உறுதியாக்கிக்கொள்ளலாம்.

***

வயிற்றில் சதை:

*

பெண்களில் பலர் மடிப்பு அம்சாக்களாக உலா வருகிறார்கள். முப்பது வயதை தொடுவதற்குள் ஏகப்பட்ட மடிப்புகள் விழுந்து, சதைகள் தொங்கி இளமையிலேயே முதுமையானவர்கள்போல வாழ்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் தொடர்ந்த உடற்பயிற்சி இன்மைதான். இத்தகைய பெண்கள் எல்லாம் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்து வந்தால் உறுதியான உடம்புடன் கட்டழ கினையும் பெறலாம்.

*

இப்படி சதை தொங்கி, மடிப்பு மடிப்பு ஆக விழ கொழுப்பு கூடுவதுதான் காரணம். இத்தகைய வேண்டாத கொழுப்புகளை எல்லாம் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி கரைத்து விடும். இன்னும் சில பெண்கள் வயிற்றில் தொங்கும் வேண்டாத சதைகளையும், பருமனான உடம்பையும், பெருத்த வயிற்றையும் குறைக்க பெல்லிரோலர், வைபிரேட்டர் போன்ற கருவிகளில் முயற்சி செய்து, பணத்தை ப்யூட்டி பார்லர்களில் செலவு செய்த பின்னரும் வயிறு சதை, குண்டான உடம்பு, பலூன் வயிறு குறையவில்லையே என்று பிலாக்கணம் வைப்பார்கள்.

*

இத்தகைய பெண்மணிகள் எல்லாம் லோ இம்பாக்ட் ஏரோபிக்ஸ் என்கிற உடற்பயிற்சியினை செய்து எளிதில் உடல் வளம் பெறலாம். பெண்கள் எடைப் பயிற்சி செய்யலாமா? செய்யக் கூடாதா? என்கின்ற கருத்து உண்டு. பெண்கள் எடை பயிற்சியினை தவிர்ப்பது நல்லது. பெண்களின் உள் உறுப்புகளில் சில ஆணின் உள் உறுப்புகளில் இருந்து மாறுபட்டிருக்கிறது. பால் சுரப்பிகள், கருப்பைகள், எல்லாம் ஆணிலிருந்து மாறுபட்டிருப்பதால் பெண்கள் எடைப் பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.


***


பெண்கள் மேற்கொள்ள வேண்டிய, மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம்.


1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் வகை உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி


இந்த நான்கு உடற்பயிற்சிகளையும் எந்த வயது பெண்கள் வேண்டுமானாலும் தொடர்ந்து செய்து உடம்பு உறுதியுடனும், உடம்பு ஆரோக்கியத்துடனும் இருக்க லாம். ஆனோரோபிக் வகை உடற்பயிற்சி என்பது விளையாட்டுத் தனமாகவே இருக்கும். இதனை உடற்பயிற்சி செய்கிறோம் என்கிற உணர்வில்லாமல் விளையாட்டாய் ஜாலியாய் மேற்கொள்ளலாம்.


***


கைகள் வலுபெற:

*

சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால் இவர்கள் எல்லாம் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி சுமார் 5 நிமிடம்தொடர்ந்து செய்து வர வேண்டும்.

*

மேலும் காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்கி இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்தும் வர வேண்டும்.


***

இடுப்பு வனப்பு பெற:

*

இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக் ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.


***


தோள்பட்டை அழகாக:

*

பெண்களின் தோள்பட்டை அவரவர்களின் தலை அமைப்பு, உடம்பின்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும். தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து தோள்பட்டை வனப்பாக இல்லை எனினும் அழகு வராது. இப்படி தோள்பட்டை பெற்ற பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது பத்து நிமிடம் தினம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியினையும் மேற்கொள்ளலாம்.


***

பாதம் உறுதி பெற:

குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெல் மில் பயிற்சியினையும், மெல்லிய நடை பயிற்சியினை அல்லது ஓடுவதையும் மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...