வேண்டாத பழக்கங்களால் விபரீதம்!
விரல் சூப்புதல், காதை குடைதல், பற்களை குத்துதல், மூக்கை துழாவுதல் என்று பலருக்கு இந்தப் பழக்கங்கள் தொட்டில் பழக்கமாய் தொடரும். குழந்தையாக இருக்கும் போது இந்த பழக்கம் இருந்தால், `அதெல்லாம் சரியாகி விடும்’ என்று ஆரம்பத்தில் மெத்தனமாக விட்டுவிடுவோம்.
ஆனால், இது போன்ற பழக்கங்கள், உடலில் பல பிரச்சினைகளுக்கு வழி வகுத்து விடும்.
தொடக்கத்தில், காதை குடைந்தால் ஏதோ ஒன்று சரியாகிவிடும் என்ற மனோபாவத்தில் அதை தொடருவார்கள். இதனால் காதுக்குள் புண், செவிக்குள் இருக்கும் ஜவ்வு கிழிந்து காது கேட்காத சூழ்நிலை ஏற்படும். மூக்கை துழாவுதலும் இப்படித்தான். மூக்கினுள் இருக்கும் ரத்த ஓட்டங்கள் நிறைந்த பகுதி பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் காற்றில் இருக்கும் தூசுகளை அகற்ற உதவும் ரோமங்கள் உதிர்ந்து, அசுத்தம் கலந்த காற்று ரையீரலுக்குச் செல்ல வழி வகுக்கும்.
சில குழந்தைகள் மூக்கை அடிக்கடி உறிஞ்சிக் கொண்டே இருப்பார்கள். இதனால் மூளையில் உள்ள சிறு நரம்புகள் பாதிக்கப்படலாம். இதனால் குழந்தைப் பருவத்திலேயே மூக்கை சிந்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். விரல் சூப்பும் பழக்கம் தொடர்ந்தால் வாயினால் சுவாசிப்பார்கள். இதனால் பற்கள் மேல் நோக்கி வளரும். குழந்தைகள் பாதுகாப்பின்மை காரணமாக, மனதளவில் ஒரு துணைக்காக விரலை சூப்புகின்றனர்.
No comments:
Post a Comment