மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று.
மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால் தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.
இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
கை, கால் அரிப்பு: கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.
சிறுகாயங்கள் நீங்க: மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் வைத்தால் விரைவில் குணமாகும்.
நல்ல தூக்கம் வர: மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும் போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்து விடுகின்றன. எனவே முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல வடிவங்களில் மருதாணி இட்டுக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment