பெற்ற பிள்ளை கவனிக்கா விடினும் தென்னை தினமும் பசி நீக்கும்.
எல்லாவற்றையும் தரும் மரமாக இருக்கும் தென்னையை கற்பக விருட்சம்
என்கின்றனர். தேங்கனி, தேங்காய், தாழை, தெங்கு, தென்னை என பல பெயர்களில்
அழைக்கப்படுகிறது. மாதர்கனி, முக்கனி, இரசபலம், சுராகாரம், பானி விருக்கம்
என பல பெயர்களால் பாராட்டப்படுகிறது.
- எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. இளநீர் ஒரு
அருமையான இயற்கை பானம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்
சாப்பிடலாம்.குளிர்ச்சியும் சத்தும் மிகுந்த பானம். உடலில் நீர்ச்சத்து
குறையாமல் பாதுகாக்கும். இளநீர் உருவாகி ஓரிரு மாதங்களில் இருந்து
பயன்படுத்தலாம்.
- தென்னையில் தேங்காய் உருவாகி முழுமையடைய பத்து மாதங்கள் ஆகின்றன. மனித கருவின் முழு வளர்ச்சிக் காலமும் பத்து மாதங்கள்.
- மேலும் பிற பழங்களை முற்றாத போது காயாக இயற்கையாக சாப்பிட இயலாது.
ஆனால் தென்னையில் தேங்காய் உருவான பின் ஒரு சில மாதங்களில் இளநீராகவும்,
பின் வழுக்கையாகவும், தேங்காய் கொப்பரையாகவும் எப்போதும் பயன்படுத்தும்
வகையில் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி இது.
- இளநீர் இனிப்பும், தேவையான இயற்கை உப்புச் சத்துக்களும் கலந்த அற்புத பானம்.
இளநீரில் உள்ள சத்துக்கள்:
- நீர்=95%
- பொட்டாசியம்=310 மி.கிராம்
- குளோரின்=180 மி.கிராம்
- சோடியம்=100 மி.கிராம்
- கால்சியம்=30 மி.கிராம்
- மக்னீசியம்=30 மி.கிராம்
- பாஸ்பரஸ்=37 மி.கிராம்
- சல்ஃபர்=25 மி.கிராம்
- இரும்பு=0.15 மி.கிராம்
- காப்பர்=0.15 மி.கிராம்
- வைட்டமின் B=20 மி.கிராம்
இவை அனைத்தும் 100 கிராம் இளநீரில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
- சிறுநீரகப் பணிகள், சிறுநீரகக் கற்கள் கரையப் பயன்படுகிறது.
- காலராவுக்கு அற்புத மருந்து.
- உடம்பில் நீர் சத்து குறையும் போது இளநீர் டானீக்காக வேலை செய்கிறது.
- விரைவில் ஜீரணம், உடல் சூடு, மூலச்சூடு, மூலம் விலகும்.
- உடல் பருமன், இரத்த அழுத்த அன்பர்கள் இளநீரால் நல்ல பலன் அடைவர்.
- பொட்டாசியம் உப்பு மிகுந்து உள்ளது. வைட்டமின் B இதயம், நரம்புகள், ஜீரண உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
- தள்ளாத வயதிலும் இளநீர்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா