தேவையான பொருட்கள்:
- முள் முருங்கை கீரை-சிறிதளவு
- பச்சரிசி மாவு-1 கப்
- உளுந்து மாவு- கால் கப்
- உப்பு-தேவயான அளவு
- மிளகுத்தூள்-1 டீஸ்பூன்
- முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
- அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கொள்ளவேண்டும்.
- இந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடையைவிட கொஞ்சம் பெரிய சைஸுக்குத் தட்டி, சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க. எண்ணெய் அதிகம் வேண்டாமேங்கறவங்க, இதை தோசைக் கல்லுலப் போட்டு மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம். இப்பொழுது முள் முருங்கை அடை ரெடி.
- இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும்.
- இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.
- முள்முருங்கை இலை-தளிர் அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும்.
- கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
No comments:
Post a Comment