Aug 12, 2012

நிறைவடைந்தது ஒலிம்பிக் திருவிழா




கடந்த 2 வாரமாக விளையாட்டு ரசிகர்களை வசியம் செய்து வைத்திருந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி, நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 204 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில், அமெரிக்கா  அதிக பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. சீனா 2வது இடமும், போட்டியை நடத்திய இங்கிலாந்து 3வது இடமும் பிடித்தது. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

இந்தியா சார்பில் விஜய் குமார், சுஷில் குமார் வெள்ளிப் பதக்கமும் ககன் நரங், சாய்னா, மேரி கோம், யோகேஸ்வர் வெண்கலமும் வென்று பெருமை சேர்த்தனர். எனினும், ஆண்கள் ஹாக்கி அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் கடைசி இடம் பிடித்தது வேதனை அளித்தது. பிரபல பாப் இசைக் குழுவான ஸ்பைஸ் கேர்ள்ஸ் உட்பட சர்வதேச புகழ்பெற்ற கலைஞர்கள் நிறைவு விழாவில் பங்கேற்று இசை மழை பொழிந்தனர். வண்ணமயமான வாணவேடிக்கையுடன் லண்டன் ஒலிம்பிக் நிறைவடைந்தது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...