Aug 12, 2012

நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் நட்டு வைத்த கொடி சேதம்


அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கழித்தும், அவர்கள் அங்கே நட்டு வைத்த கொடிகள் இன்னும் சேதமடையாமல் பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் முதன் முதலாக நிலவில் கால் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் 5 முறை நிலாவுக்கு சென்று வந்து விட்டனர். கடந்த 1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அப்போலோ 17 விண்கலத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றது தான் நிலவுக்கு அமெரிக்கர்கள் கடைசியாகச் சென்றதாகும்.
இந்த 6 முறையும் தங்கள் பயணத்தின் நினைவாக விஞ்ஞானிகள் அமெரிக்க கொடியை நிலவில் நட்டு வைத்தனர்.
அந்த கொடிகளில் நிலவுக்கு முதன் முதலாகச் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் நட்டுவைத்த கொடியைத் தவிர மற்ற 5 கொடிகள் நிலவின் தட்பவெட்பத்தையும் தாண்டி இத்தனை ஆண்டுகள் கழித்தும் பறந்து கொண்டிருக்கின்றன. நாசாவின் கமெரா எடுத்துள்ள புகைப்படத்தில் இந்த கொடிகள் பறப்பது தெளிவாகத் தெரிகிறது.
தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறினாலும் இதுவரை அமெரிக்க விஞ்ஞானிகள் மட்டுமே நிலவில் கால் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...