Nov 17, 2012

விண்வெளியில் புதிய பால்வெளி மண்டலம் கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் மிகத் தொலைவில் உள்ள பால்வெளி மண்டலத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு MACS0647-JD என்று பெயரிட்டுள்ளனர்.
நமது சூரியக் குடும்பத்தின் பால்வெளி மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன. பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியன் அமைந்துள்ளது.

இதைப் போன்று பிரபஞ்சத்தில் சிறியதும், பெரியதுமாக எண்ணற்ற பால்வெளி மண்டலங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டலங்களை வான்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள்
மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் “ஹப்பிள்’ மற்றும் “ஸ்பிட்ஸர்’ தொலைநோக்கிகள் மற்றும் அறிவியல் இதழான “நேச்சர்’ அமைத்துள்ள தொலைநோக்கியை ஒருங்கிணைத்து மேற்கொண்ட ஆய்வில் புதிய பால்வெளி மண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பிரபஞ்சம் தோன்றி 42 கோடி ஆண்டுகளுக்குப் பின் இந்தப் புதிய பால்வெளி மண்டலம் உருவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. பூமியில் இருந்து 1330 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தப் புதிய பால்வெளி மண்டலம் அமைந்துள்ளது. இதற்கு “MACS0647-JD” என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
MACS0647-JD மண்டலம் மிகவும் சிறியதாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் அகலம் 600 ஒளி ஆண்டுகள் தொலைவுக்கும் குறைவாக இருப்பதாக தெரிகிறது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...