உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் சில..
|
நிறைய மக்கள் அதிகம் நடப்பதற்கு உடல் எடையை குறைப்பதற்கு இல்லாமல், உடல்
எடையை கட்டுப்பட்டுவதற்குத் தான். ஆகவே உடல் எடை அதிகரித்து அசிங்கமான
தோற்றத்தைப் பெறுவதற்கு முன்பு, நடைப்பயிற்சியை ஆரம்பியுங்கள். உடல் எடை
எளிதில் குறைய வேண்டுமென்றால், தினமும் நடந்தால் மட்டும் முடியாது
என்பதற்காக, சிலர் அவற்றை ஒரு பெரிய விஷயமாக எண்ணாமல் நடைப்பயிற்சியை
தவிர்த்து, ரன்னிங், நீச்சல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
|
ஆனால் அந்த பயிற்சிகளை அனைவருமே செய்ய முடியாது. ஆகவே மக்களுள் பலர்
நடைப்பயிற்சியைத் தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் அந்த
நடைப்பயிற்சியை ஒரு சீரியஸ் இல்லாமல் சாதாரணமாக செய்கின்றனர். எனவே
அவர்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. ஏனெனில் சாதாரணமாக செய்தால்,
எந்த பயனும் இல்லை. ஆனால் அதையே நன்கு சுறுசுறுப்போடு, தினமும் அரை
மணிநேரம் செய்தால் உடலில் இருந்து 150 கலோரிகள் கரையும். அதிலும் தொடர்ந்து அந்த மாதிரியான நடைப்பயிற்சி மற்றும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஒரு வாரத்தில் 1 பவுண்ட் கலோரிகள் கரைந்துவிடும். எனவே உடல் எடையை குறைக்க எந்த மாதிரியான நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடல் பருமன் குறைந்து, அழகான தோற்றத்தில் காணப்படலாம் என்பதை சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்... * காலையில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது பெருபாலோனோர் ஒரு கூட்டமாக சேர்ந்து பேசிக் கொண்டே செய்வார்கள். அந்த நேரம் நடைப்பயிற்சியை விட வாய் பேச்சு தான் அதிகமாக இருக்கும். ஆகவே உடல் எடை குறைய வேண்டுமென்று ஆசைப்பட்டால், தனியாக செய்வது தான் நல்லது. இதனால் நீங்கள் உங்கள் வழியில் செய்யலாம். * நடக்கும் போது மெதுவாக செல்லக் கூடாது. முதல் நாள் ஒரு வேகத்தில் நடந்தால், மறுநாள் அதை விட சற்று வேகமாக நடக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக எப்போதுமே வேகமாக நடக்க வேண்டாம். பின் உடல் சோர்ந்துவிடும். இல்லையெனில் சிறிது நேரம் மெதுவாக நடந்தால், சிறிது நேரம் வேகமாக நடக்க வேண்டும். * நடக்கும் பாதையை வேண்டுமென்றால் மாற்றலாம். உதாரணமாக மலைப்பகுதி. ஏனெனில் இந்தப் பகுதியில் நடந்தால், உடலில் உள்ள லிபிட் செல்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, அவை வெடித்துவிடும். மேலும் தசைகளும் சற்று வலுவடையும். ஆகவே நடைப்பயிற்சி உடல் எடையை மட்டும் குறைக்காமல், தசையையும் வலுபடுத்தும். * தொடர்ந்து நடக்க வேண்டும். அதாவது, காலையில் நடந்தால், மாலையில் எந்த வேலையும் இல்லை, வேகமாக எடை குறை வேண்டும் என்பதற்காக மறுபடியும் மாலையில் நடக்கக்கூடாது. காலையில் நடந்தால், மீண்டும் மறுநாள் காலையில் தான் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான், சரியான பலனைப் பெற முடியும். * நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த உடற்பயிற்சி. அதிலும் நடைப்பயிற்சியால் உடல் எடை குறைவது தாமதமாக இருப்பது போன்று உணர்ந்தால், அப்போது அந்த நடைப்பயிற்சியிலேயே சற்று கடினமாகவற்றை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். அதாவது, நடைப்பயிற்சியை கடினமான வழியான மணல் அல்லது நீரில் மேற்கொள்வதால், உடலில் அழுத்தம் ஏற்பட்டு, கொழுப்புக்கள் எளிதில் கரைந்துவிடும். உடல் எடையும் விரைவில் குறையும். * நடைப்பயிற்சி எந்த ஒரு கடினமான உடற்பயிற்சி இல்லை. ஆனால் நாம் கலோரி குறைவான உணவை உண்டால், நிச்சயம் இது ஒரு சிறந்த ஒரு உடற்பயிற்சியாக அமையும். எனவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், உடல் எடை எளிதில் குறைந்து, உடல் சிக்கென்று அழகாக ஆரோக்கியமாக இருக்கும். |
யுஎஸ்பி3 பற்றிய சில முக்கிய தகவல்கள்.
கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய
தகவல்கள் நிறைய உள்ளன.
Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் 1996ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.
யு.எஸ்.பி.3 அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணர முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் வன்தட்டுகளின் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம்.
மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில் இந்த இரண்டு தொழில்நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம். யு.எஸ்.பி. 3 ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது.
யு.எஸ்.பி.2 ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும் யு.எஸ்.பி சாதனத்தை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கணணி செயல்பாட்டினைப் பொறுத்த வரை இரு சாதனங்களுக் கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகையில் ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும் ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
எடுத்துக்காட்டாக பழைய கணணியில் யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில் கணணியின் செயல் திறன் மெதுவாக இருந்தால் யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.
இந்த இரண்டு தொழில்நுட்பங்களுக்கு இடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு தகவல் செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 தகவலை அனுப்பும் அதே நேரத்தில் தகவலை பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் தகவலை அனுப்ப முடியும்.
இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில்நுட்பம் வன்தட்டுகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.
யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment