டெஹ்ரான்: இஸ்ரேல் தங்கள் நாட்டை தாக்கினால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெளிப் பிரிவு கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில்,
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடும் செயலாகும். இஸ்ரேல் போர் தொடுத்தால் நிலைமை கட்டுக்குள் இருக்காது. இதன் மூலம் நிச்சயம் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும் என்றார்.
ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை மேம்படு்த்துவது இஸ்ரேலுக்கு கவலை
அளிப்பதாக உள்ளது. அதனால் ஈரானில் உள்ள அணு உலைகளை அழித்துவிடுவோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது. அணு ஆயுத திட்டம் நல்ல நோக்கங்களுடன் தான் பலப்படுத்தப்படுகிறது. அதே சமயம் யாராவது தாக்கினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் கமாண்டர் மேஜர் ஜெனரல் முகமத்து அலி ஜபாரி கூறுகையில், ஈரான் மீது போர் தொடுப்பது நடக்கும். நிச்சயம் போர் நடக்கும். ஆனால் எங்கே, எப்போது என்பது தான் தெரியவில்லை. ஈரான் மீது போர் தொடுப்பது தான் ஒரே வழி என்று இஸ்ரேல் அதிகாரிகள் நினைக்கின்றனர். அவர்கள் மட்டும் போர் தொடுத்தால் அவர்களின் அழிவுக்கு அது வழிவகை செய்துவிடும் என்றார்.
No comments:
Post a Comment