Oct 7, 2012

கடலுக்குள் மின் உற்பத்தி நிலையம்


மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. சூழலில் மிக பெரும் அலை மின் நிலையம் ஒன்றுபிரான்சின் கடல் பகுதியில் அமைக்கப்படுகிறது.
அயர்லாந்துவை தலைமையிடமாக கொண்ட open hydro  என்ற நிறுவனம் இந்த அலை மின் நிலையத்தை நிறுவப்போகிறது. 850 டன் எடையுள்ள மிக பெரிய டர்பைன்கள் நான்கினை பிரான்சின் கடலில் பொருத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த டர்பைன்கள் ஒவ்வொன்றும் 2 மெகாவோர்ட் மின்சாரத்தை கொடுக்கும் சக்தி படைத்தவை.
72 அடி விட்டமுள்ள இந்த டர்பைன்கள் கடலில் 115 அடி ஆழத்தில் நிறுவப்பட போகிறது. 2012 ம் ஆண்டில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த அலை மின் நிலையத்தின் மூலம் 4000 வீடுகளுக்கு தேவையான மின்சாரம் கொடுக்க முடியும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...