வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள் தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத்
தரப்பட்டிருந்தது.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள் வெங்காயத்தில் விட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.
பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விஷ ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுத்தத் தேய்த்தால் வலி குறையும்.
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment