மேலை நாடுகளில் விரும்பி ஆடப்படும் ரக்பி ஒரு விறுவிறுப்பான விளையாட்டு. ஆனால் இது போன்ற விளையாட்டுகளில் கொஞ்சம் முரட்டுத்தனமும் கலந்திருக்கும்.
இம்மாதிரியான விளையாட்டுகளில் தலைப் பகுதியில் காயம் படும்போது அது மோசமான பாதிப்பை ஏற் படுத்திவிடும் என்பதால், தலையைக் காப்பது மட்டுமின்றி கண்காணிக்கவும் செய்யக்கூடிய ஹெல்மட்டை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ஹெல்மட், வீரர்கள் விளையாட்டுக் களத்தை விட்டு வெளியே வந்ததும் அவர்களின் மூளை அலைகளை
அளவிடும். அப்போது, கடுமையான மோதலால் தலைக்குள் ஏதும் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதைக் கண்டு பிடித்துக் கூறிவிடும்.
மூளையின் சிறிய காந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதன் மூலம் இந்த ஹெல்மட், பாதிப்புகளைக் கண்டறிந்துவிடுகிறது.
தற்போது இந்த ஹெல்மட் ஆய்வகத்தில்தான் உள்ளது. இன்னும் விளையாட்டு வீரர்களிடம் பரிசோதிக்கப்படவில்லை.
ஆனால் இதன் மூலம் `பிரெய்ன் இமேஜிங்’ மற்றும் மூளை வியாதிகளை அதிகச் செலவில்லாமல் கண்டுபிடிப்பது போன்ற எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் மின்னியல் மற்றும் கணினிப் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜோஸ் லூயிஸ் கான்ட்ரேராஸ் விடால்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், மூளை சமிக்ஞைகளைக் கொண்டு செயற்கைக் கால்களை இயங்கச் செய்வது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்துவருகிறார், டாக்டர் ஜோஸ்.
அம்முயற்சி வெற்றி பெற்றுவிட்டால், மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் நன்மை பிறக்கும்!
No comments:
Post a Comment