May 5, 2012

மனிதனின் உயரிய உணவுகளில் தேங்காயும் ஒன்று. நிறைய அன்பர்கள் தேங்காயால் கொலஸ்ட்ரால் கூடுவதாக எண்ணுகின்றனர். தேங்காயை சமைக்கும் போது முழுமை பெறாத கொழுப்பில் இருந்து முழுமைப் பெற்ற கொழுப்பாக மாறுகிறது. அதுவே கொலஸ்ட்ராலாக மாறுகிறது. ஆனால் சமைக்காத தேங்காய், தேங்காய் பால் மனிதர்களுக்கு மிகுந்த நன்மை புரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
தேங்காயில் உள்ள சத்துக்கள்:

  1. நீர்=36%
  2. புரோட்டின்=4.5%
  3. கொழுப்பு=42%
  4. தாது உப்புக்கள்=1%
  5. நார்ச்சத்து=3.6%
  6. மாவுப்பொருள்=13%
  7. கால்சியம்=10 யூனிட்
  8. பாஸ்பரஸ்=240 யூனிட்
  9. இரும்பு=1.7 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் தேங்காய் பாலில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
  • சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு அற்புத பானம்.
  • மலச்சிக்கல், விலகும். குடல் பூச்சிகள் நீக்கும்.
  • புற்று நோயை குணப்படுத்தும் உணவு. புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக சக்தி தரும் உணவு.
தளராத மன உறுதிக்கு இனிப்புடன் தேங்காய் பால் தினமும் சுவைத்திடுவோம்.
குறிப்பு:
  • தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக்

இஞ்சின் சத்துக்கள்

இஞ்சி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்தது. மேலும் இஞ்சியில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன.
இஞ்சியில் காணப்படும் சத்துக்கள்:
  1. ஈரம் = 80.9 gm
  2. புரதம் = 2.3 gm
  3. கொழுப்பு = 0.9 gm
  4. கனிமங்கள் = 1.2 gm
  5. நார் பொருள் = 2.4 gm
  6. கார்போஹைடிரேட்டுகள் = 12.3 gm
  7. வலிமை சக்தி = 67 kcal
  8. கால்சியம் = 20 mg
  9. பாஸ்பரஸ் = 60 mg
  10. இரும்பு = 2.6 mg
  11. கரோட்டின் = 40 mg
  12. தையாமின் = 0.06 mg
  13. ரிபோஃபிளேவின் = 0.03 mg
  14. நியாசின் = 0.6 mg
  15. வைட்டமின் சி = 6 mg

மிளகின் சத்துக்கள்

மிளகு சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்த உணவு பொருள். மேலும் மிளகில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன. காய்ந்த மிளகு 95% சாப்பிட தகுதி வாய்ந்த உணவு ஆகும்.
மிளகில் காணப்படும் சத்துக்கள்:
  1. ஈரம் = 13.2 gm
  2. புரதம் = 11.5 gm
  3. கொழுப்பு = 6.8 gm
  4. கனிமங்கள் = 4.4 gm
  5. நார் பொருள் = 14.9 gm
  6. கார்போஹைடிரேட்டுகள் = 49.2 gm
  7. வலிமை சக்தி = 304 kcal
  8. கால்சியம் = 460 mg
  9. பாஸ்பரஸ் = 198 mg
  10. இரும்பு = 16.8 mg
  11. கரோட்டின் = 1080 mg
  12. தையாமின் = 0.09 mg
  13. ரிபோஃபிளேவின் = 0.14 mg
  14. நியாசின் = 1.4 mg
இவை அனைத்தும் நன்றாக காய்ந்த மிளகில் காணப்படும் சத்துக்கள் ஆகும்.

மிளகின் சத்துக்கள்

மிளகு சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்த உணவு பொருள். மேலும் மிளகில் குறிப்பிடும் படி பல சத்துக்களும் உள்ளன. மிளகின் சத்துக்கள் மிளகு 81% சாப்பிட தகுதி வாய்ந்த உணவு ஆகும்.
மிளகில் காணப்படும் சத்துக்கள்:
  1. ஈரம் = 70.6 gm
  2. புரதம் =4.8 gm
  3. கொழுப்பு = 2.7 gm
  4. கனிமங்கள் = 1.8 gm
  5. நார் பொருள் = 6.4 gm
  6. கார்போஹைடிரேட்டுகள் = 13.7 gm
  7. ஆற்றல் சக்தி = 98 kcal
  8. கால்சியம் = 270 mg
  9. பாஸ்பரஸ் = 70 mg
  10. இரும்பு = 2.4 mg
  11. கரோட்டின் = 540 mg
  12. தையாமின் = 0.05 mg
  13. ரிபோஃபிளேவின் = 0.04 mg
  14. நியாசின் = 0.2 mg
  15. வைட்டமின் = 1 mg
இந்த அனைத்தும் பச்சையாக இருக்கும் மிளகில் காணப்படும் சத்துக்கள் ஆகும்.

பச்சைப்பயறு முளைதானியப் பால்

தேவையான பொருட்கள்:
  1. முளைக்கட்டிய பச்சைப்பயறு.
  2. தேன்.
  3. பால்.
செய்முறை:
  • பச்சைப்பயிற்றை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
  • பின் துணியில் சுற்றி வைத்தால் முளை விட்டிருக்கும்.
  • பின்பு முளை விட்ட பச்சைப்பயிற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு நன்கு அரைக்க வேண்டும்.
  • இதனுடன் தேன், பால் சோ்ததுக் கொள்ளவேண்டும்.

இயற்கைத் தேனீர் (டீ)

தாமரைப்பூரோஜாப் பூசெம்பருத்திப் பூ
தேவையான பொருட்கள்:
  1. ஆவாரம் பூ.
  2. ரோஜாப் பூ.
  3. தாமரைப்பூ.
  4. செம்பருத்திப் பூ.
  5. பால்.
  6. சீனி.
செய்முறை:
  1. ஆவாரம் பூ, ரோசாப் பூ, தாமரைப்பூ, செம்பருத்திப் பூ ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து நிழலில் காய வைத்து நன்றாக பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு அந்த பொடியை  தேவையான அளவு  பாலில்  சீனி கலந்து காய்ச்சி அருந்தலாம்.

முள் முருங்கை அடை


தேவையான பொருட்கள்:
  1. முள் முருங்கை கீரை-சிறிதளவு
  2. பச்சரிசி மாவு-1 கப்
  3. உளுந்து மாவு- கால் கப்
  4. உப்பு-தேவயான அளவு
  5. மிளகுத்தூள்-1 டீஸ்பூன்
செய்முறை:
  • முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கொள்ளவேண்டும்.
  • இந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடையைவிட கொஞ்சம் பெரிய சைஸுக்குத் தட்டி, சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க. எண்ணெய் அதிகம் வேண்டாமேங்கறவங்க, இதை தோசைக் கல்லுலப் போட்டு மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம். இப்பொழுது முள் முருங்கை அடை ரெடி.
  • இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும்.
  • இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.
முள்முருங்கையின் மருத்துவக் குணங்கள்:
  1. முள்முருங்கை இலை-தளிர் அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும்.
  2. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
Rating: 5.0/5 (2 votes cast)

ஈரப்பலாக்காய்க் கறி





தேவையான பொருட்கள்:
  1. நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1
  2. வெங்காயம் -1
  3. பச்சை மிளகாய் -1
  4. தேங்காய்ப் பால் – ¼ கப்
  5. பூண்டு- 4 பல்லு
  6. இஞ்சி – 1 துண்டு
  7. மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன்
  8. மிளகாய்ப்பொடி -1டீ ஸ்பூன்
  9. மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்
  10. உப்பு – தேவைக்கேற்ப
  11. புளிப்பேஸ்ட்  – தேவைக்கேற்ப
  12. கடுகு- சிறிதளவு
  13. கறிவேப்பிலை – சிறிதளவு
  14. எண்ணெய் – 1டீ ஸ்பூன்
செய்முறை:
  • பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டிகொள்ளவேண்டும்.
  • உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்க வேண்டும் .
  • தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம் மிளகாய் வெட்டி கொள்ளவேண்டும்.
  • எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
  • வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.
  • தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து

கேரட் அல்வா


தேவையான பொருட்கள்:
  1. பெரிய கேரட் – 1/4 கிலோ
  2. சர்க்கரை – 200 கிராம்
  3. பால்- 1/2 லிட்டர்
  4. நெய் – 3 டேபிள் ஸ்பூன்
  5. முந்திரி – 10 – 15
  6. கிஸ்மிஸ் பழம் – 2 டீஸ்பூன்
  7. ஏலப்பொடி – 1 பின்ச்
  8. குங்குமப்பூ – சிறிது
செய்முறை:
  • கேரட்டை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு  கேரட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
  • 1 டீஸ்பூன் நெய்யை வாணலியில் விட்டு கேரட் துருவலை பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் பாலை பாதியாக குறுகும் வரை காய்ச்சவும்.
  • வதக்கிய கேரட்டில் பாலை சேர்த்துக் கிளறவும். ஓரளவு பால் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்.
  • சிறிது, சிறிதாக நெய் விட்டுக்கிளறவும். ஏலப்பொடி, பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்துக்கிளறவும்.
  • அல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ் பழம், முந்திரி

நூல்கோல் வடை.

தேவையான பொருட்கள்:
  1. நூல்கோல் – 2
  2. பொட்டுக்கடலை மாவு – 1 கப்
  3. பச்சை மிளகாய் – 3
  4. இஞ்சி – 1 துண்டு
  5. வெங்காயம் – 3
  6. கறிவேப்பிலை – சிறிது
  7. பூண்டு - 10 பல்
  8. உப்பு – 1 டீஸ்பூன்
  9. எண்ணெய் – 1/4 கப்
  10. கடுகு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
  • நூல்கோலை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து நறுக்கிய எல்லாவற்றையும் அதில் கொட்டி உப்பு சேர்க்கவும்.
  • நூல்கோலையும் அதில் சேர்த்து தண்ணீர்விடாமல் வதக்கி, காய் வெந்ததும் பொடித்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
  • இதில் கொத்துமல்லித்தழையைப்பொடியாக நறுக்கிப்போட்டு காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி போட்டு, சிவக்க வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதை

ஆரோக்கிய சமையல்

தேவையான பொருள்கள்:
  1. முட்டைகோஸ் = அரை கிலோ
  2. வெங்காயம் = 1
  3. தக்காளி = 2
  4. மஞ்சள் தூள் = சிறிதளவு
  5. மிளகாய் தூள் = 3 தேக்கரண்டி
  6. கடுகு = சிறிதளவு
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. உளுந்து = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • முட்டைகோஸை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டடையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் உளுந்து போட்டு தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்கி வெந்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • பிறகு முட்டைகோஸை போட்டு சிறிது சிறிது புளி தண்ணீர் விட்டு கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு ந‌ன்றாக கிளறி மூடி வைத்து இடையிடையே திறந்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான மற்றும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான முட்டைகோஸ் காரக்குழம்பு தயார்.
மருத்துவ குணங்கள்:
  • முட்டைக்கோஸில் வைட்டமின் “C” மற்றும் வைட்டமின் “B6″, வைட்டமின் “A”அதிக அளவில் உள்ளது.
  • மேலும் கொழுப்பு 0.1g 0%, சோடியம் 16mg 1%, கார்போஹைட்ரேட்டுகள் 5.2g 2%, நார்ச்சத்து உணவு 2.2g 9%, சர்க்கரைகள் 2.8g, புரதம் 1.1g 2%, கால்சியம் 4%, இரும்பு 2%, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவைமுட்டைக்கோஸில் காணப்படுகிறது.
  • முட்டைக்கோஸ் தாவரத்தின் இலை பகுதியை தான் நாம் உணவாக சாப்பிடுகிறோம். இந்த முட்டைக்கோஸ் நுரையீரல் மற்றும் வயிற்று வலி, குடல் புண்கள் போன்ற வயிறு

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...