May 5, 2012

ஆரோக்கிய சமையல்

தேவையான பொருள்கள்:
  1. முட்டைகோஸ் = அரை கிலோ
  2. வெங்காயம் = 1
  3. தக்காளி = 2
  4. மஞ்சள் தூள் = சிறிதளவு
  5. மிளகாய் தூள் = 3 தேக்கரண்டி
  6. கடுகு = சிறிதளவு
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. உளுந்து = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • முட்டைகோஸை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டடையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் உளுந்து போட்டு தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்கி வெந்ததும் தக்காளி போட்டு வதக்கவும்.
  • பிறகு முட்டைகோஸை போட்டு சிறிது சிறிது புளி தண்ணீர் விட்டு கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு ந‌ன்றாக கிளறி மூடி வைத்து இடையிடையே திறந்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான மற்றும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான முட்டைகோஸ் காரக்குழம்பு தயார்.
மருத்துவ குணங்கள்:
  • முட்டைக்கோஸில் வைட்டமின் “C” மற்றும் வைட்டமின் “B6″, வைட்டமின் “A”அதிக அளவில் உள்ளது.
  • மேலும் கொழுப்பு 0.1g 0%, சோடியம் 16mg 1%, கார்போஹைட்ரேட்டுகள் 5.2g 2%, நார்ச்சத்து உணவு 2.2g 9%, சர்க்கரைகள் 2.8g, புரதம் 1.1g 2%, கால்சியம் 4%, இரும்பு 2%, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவைமுட்டைக்கோஸில் காணப்படுகிறது.
  • முட்டைக்கோஸ் தாவரத்தின் இலை பகுதியை தான் நாம் உணவாக சாப்பிடுகிறோம். இந்த முட்டைக்கோஸ் நுரையீரல் மற்றும் வயிற்று வலி, குடல் புண்கள் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
  • ஆஸ்துமா குறையும். எலும்புகள் பலம் பெறும்.  இந்த முட்டைக்கோஸ் காரக்குழம்பு மிகவும் மருத்துவ குணங்கள் மிகுந்தது.
இந்த ஆரோக்கியமான முட்டைக்கோஸ் காரக்குழம்பை வைத்து சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...