இது தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி, வட்டமான சில மலர்களை உடையது.
பொதுவாக நீலநிறமாகவும், அரிதாக வெண்ணிற, செந்நிற மலர்களும் காணப்படும்.
விஷ்ணுக் கிரந்தி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் தரிசுகளில் தானே
வளர்கிறது. செடிகள் முழுவதும் மருத்துவக் குணமுடையது.
மருத்துவக் குணங்கள்:
மருத்துவக் குணங்கள்:
- விஷ்ணுக் காந்தி நோய்நீக்கி உடல் தேற்றியாகவும், கோழையகற்றியாகவும், வியர்வை பெருக்கியாகவும், தாது பலமூட்டியாகவும் செயல்படுகிறது.
- விஷ்ணுக் காந்தி சமூலம் 5 கிராம் எடுத்து பால்விட்டு நெகிழ அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டி மூன்று வேளையும் கொடுத்து வந்தால் சீதபேதி, காய்ச்சல், மேகம், என்புருக்கி, இரைப்பு, இருமல், ஈளை, வாதம், பித்தம் தொடர்பான நோய்கள் அனைத்தும் குறையும்.
- விஷ்ணுக் காந்தி சமூலத்தை விழுதாக அரைத்து நெல்லிக்காயளவு ஓரிரு மண்டலம் உட்கொண்டு வந்தால் கண்டமாலை நோய் குறையும்.
- விஷ்ணுக் காந்தியை கொட்டைப் பாக்களவு அரைத்து எடுத்து தயிரில் கலந்து கொடுத்து வந்தால் இரத்தபேதி, சீதபேதி குறையும். காரம், புளி நீக்க வேண்டும்.
- விஷ்ணுக்காந்தி, ஓரிதழ்தாமரை, கீழாநெல்லி சமன் அரைத்துப் பாக்கு அளவு காலை, மதியம், இரவு உணவுக்கு முன் உண்டு பால் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி, இந்திரிய ஒழுக்கு, மறதி, வெட்டைச்சூடு தணிந்து உடல்பலம் உண்டாகும்.
- விஷ்ணுக்காந்தி அரைக் கைப்பிடியளவு எடுத்து மூன்று வெள்ளைப் பூண்டு பற்களும் அரைத்தேக்கரண்டி சீரகமும் சேர்த்து நெகிழ அரைத்து கொடுத்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
No comments:
Post a Comment