Jun 28, 2012

ஆரோக்கியமான வாழ்வுக்கான விதிமுறைகள்

ஆரோக்கியமான வாழ்வுக்கான விதிமுறைகளைக் கடைபிடிப்பது மிகவும் எளிதானது. சில விதிமுறைகளை மனதில் வைத்துக்கொண்டலே போதும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக நாம் எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியதில்லை.


முக்கியமான விதிமுறைகள்:

1. பசுமையான, புதிய, அன்று சமைக்கப்பட்ட உணவுதான் மிகச்சிறந்தது. ஜங்க் ஃபுட், பதனிட்ட உணவுகள், மற்றும் இரசாயனப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும். மைதா மாவில் செய்த ரொட்டியைவிட முழுத்தானிய மாவில் செய்த ரொட்டிதான் நல்லது. வேகவைத்து சமைக்கப்ட்ட மீன் குழம்பு வறுத்த மீனைவிட ஆரோக்கியமானது. இதேபோல் இறைச்சி குழும்பு வறுத்த மாமிசத்தைவிட நல்லது. சமைப்பதற்கு நல்ல தாவர எண்ணைய்களைப் பயன்படுத்துங்கள். பச்சைக்காய்கறிக் கலவைக்கு ஆலிவ் எண்ணையை உபயோகப்படுத்துங்கள். மலிவான, தரமில்லாத எண்ணைகள் நல்லதல்ல. இவைகளில் கெடுதலான ட்ரான்ஸ்-கொழுப்புக்கள் இருக்கும். சமைக்க அதிக நேரம் இல்லாவிட்டால் பசுமையான, புதிய காய்கறிகளை

கொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதா? அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர்! இயற்கை தரும் இளமை வரம்!


இயற்கை தரும் இளமை வரம்!

ஞ்சள் ஆடையும் மென் மேனியுமாக வசீகரிக்கும் வாழைப்பழம், நமக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் ஒன்று. பச்சை, பூவன், மலை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்.. என சுவை சொட்டும் இதன் வகைகள் ஏராளம்; அது தரும் சரும பலன்களும் தாராளம்! வயோதிகத்தைத் தள்ளி வைத்து, இளமையை தக்க வைத்து நம் வனப்பைக் கூட்டும் வாழைப்பழத்தின் அழகு பலன்களைப் பார்ப்போமா?
வெயிலின் உக்கிரத்தால் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது 'வாழைப்பழ பேஸ்ட்'..
ஒரு வாழைப்பழத்துடன் (வெறும் வாழைப்பழம் என்றால், அது பூவன் பழத்தையே குறிக்கும்) சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.
இந்த வாழை - வெள்ளரி கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு

பாட்டு கேட்டால் பதற்றம் குறையும்! --உபயோகமான தகவல்கள்


பாட்டு கேட்டால் பதற்றம் குறையும்!

Driving anxiety... சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கார் ஓட்டுபவர்களைத் துரத்தும் லேட்டஸ்ட் பிரச்னை இதுதான்! கார் ஓட்டும்போது இனம் புரியாத பதற்றம், தலைச் சுற்றல், மயக்கம், குமட்டல் போன்றவை ஏற்பட்டால், அவை 'டிரைவிங் பதற்ற’த்துக்கான அறிகுறிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
 95 சதவிகித விபத்துகள்

அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்


'அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''
விஜயலட்சுமியின் வியூகம்
''அடுத்த படத்துக்காக இப்போ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன்!'' - பொய் சொல்கிறார் விஜயலட்சுமி. ''ஐயோ, சத்தியமா இப்போ வெயிட் போட்டிருக்கேன். இயல்பாவே நான் ரொம்ப ஸ்லிம். கொஞ்சமா வெயிட் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. சும்மாவே பிரியாணின்னா, நான் வெளுத்துக் கட்டுவேன். வெயிட் போடணும்னு சொன்னதும் கேட்கவா வேணும்? தினமும் பிரியாணியா பிரிச்சு மேயுறேன்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்


உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
 
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...