Sep 1, 2012

IBM இன் புதிய அதி உயர் தொழில்நுட்ப கட்டடம் இத்தாலியில்!







முன்னனி கணினி தயாரிப்பு நிறுவனமான IBM, தனது அதி உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய நவீன கிளையை இத்தாலி, ரோம் நகரில் நிறுவியுள்ளது.
Iosa Ghini Associati என்ற நிறுவனத்தால் குறித்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு மரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன? தப்பிக்க வழி உண்டா?




பெண்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருதய நோய்: கண்டறியும் பரிசோதனைகள்.


இதயம் எப்படி இருக்கிறது என்று பரிசோதிப்பதற்கு இன்று விஞ்ஞானம் பல உபாயங்களைத்தந்திருக்கிறது.
அதில் மிக எளிய வழி காதுகொடுத்துக்கேட்டல் என்று முந்தைய பதிவில் பார்த்திருந்தோம்.
அதற்கு அடுத்ததாக மேலும் பல இதயச்சோதனைகள் வந்திருக்கின்றன.
இரத்தப்பரிசோதனை, ஈசிஜி(ECG), எக்ஸ்ரே(X-Ray),எக்கோகாடியோகிராம்(Echo cardiogram),எக்சர்சைஸ் ஈசிஜி(Exercise-ECG), அஞ்சியோகிறாம்(Angiogram),சீடி ஸ்கான் (CT Scan),MRI ஸ்கான்,கதிர்வீச்சு ஸ்கான்(Radio Nuclide)., என பலவகையான பரிசோதனை முறைகள் இருக்கின்றன.
   மருத்துவம் என்பது மந்திர தந்திர மல்ல.நோயொன்றை கண்டறிவதற்கு முன்னர் பல தகவல்கள் திரட்டப்படும்.இந்தத்தகவல்கள் ஆராயப்பட்டுத்தான் நோய் பற்றிய தீர்மானம் எடுக்கப்படுகிறது.

நல்ல அம்மாவாக 20 வழிகள்



 
உலகிலேயே தனது அம்மாவைப் போல சிறந்தவர் இருக்க முடியாது. சிறந்த அறிவாளி யாரும் இருக்க முடியாது என்றுதான் ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும். தனது குழந்தையிடம் அதிக நெருக்கமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார். குழந்தைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டிய தாய், அந்தக் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, தனது குழந்தையிடம் நெருக்கமாக இருக்க பல்வேறு வல்லுநர்களும், புத்தக ஆசிரியர்களும் 20 வழிகளை பட்டியலிட்டு உள்ளனர்.

பூமியின் புதிர்கள்


 
சூரிய மண்டலத்தில் உள்ள 8 கிரகங்களில் பூமிதான் அற்புதமானது.
இங்குதான், விதம்விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. வகைவகையான தாவரங்கள் வளர்கின்றன. காற்று இருக்கிறது. அது தென்றலாகவும் புயலாகவும் வீசுகிறது. எரிமலைகள் இருக்கின்றன. பல்வேறு வடிவங்களில் தண்ணீர் இருக்கிறது.
உயிரினங்களில் பறப்பவை இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ விதம்.
நீந்துகிறவை இருக்கின்றன. அவையும் பலவிதம்.
படிக்கிறவை எழுதுகிறவையும் இருக்கின்றன. ஆம். மனிதர்களைத்தான் கூறுகிறேன். மனிதர்கள் இயற்கையை ஆள்கிறார்கள். அல்லது ஆள முயற்சி செய்கிறார்கள்.
பூமி தோன்றிய கதை நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகிக் கொண்டே போகிறது. ஆம். புதிது புதிதாய் வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகின்றன.

பெண்கள் தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம்.

தூக்கம் என்பது பகலில் நாம் செலவிடும் ஆற்றலை மீண்டெடுக்கும் நிலை என்னும் எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் விஞ்ஞானம் அதை  மறுக்கிறது. ஒரு நாள் இரவு எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கினால் உடல் சேமிக்கும் ஆரோக்கியமும் ஒரு துண்டு ரொட்டியில் கிடைக்கும்  ஆரோக்கியமும் ஒரே அளவே எனக் கூறி விஞ்ஞானம் வியக்க வைக்கிறது.

தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் டாக்டர்கள் எச்சரிக்கை




பெண்களுக்கு தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். சரியாக தூங்காவிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். பெண்களின் தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செரில் தாம்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 40-50 வயது பெண்கள் 412 பேரின் மருத்துவ விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முக்கியமாக,

விண்வெளியில் 5வது முறையாக நடந்து சுனிதா வில்லியம்ஸ் சாதனை



வாஷிங்டன் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து 5வது முறையாக விண்வெளியில் நடந்து பணிகளை செய்தார். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவானது ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஆராய்ச்சி மையத்தை விண்வெளியில் அமைத்துள்ளது. அங்கு தங்கி சுனிதா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சுனிதா, சக விண்வெளி வீரரான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிஹிகோ ஹாஸ்ஹைடு டன் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி மாலை 5.46க்கு விண்வெளியில் நடந்து பணிகளை மேற்கொண் டார். மீண்டும் நேற்று அதிகாலை 2.03 நிமிடத்துக்கு

ஒபாமா நடவடிக்கை இந்தியருக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி



வாஷிங்டன்: அமெரிக்காவில் புகழ் வாய்ந்த ஜான் எப் கென்னடி மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரொமேஷ் வத்வானி (64) நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் பராக் ஒபாமா இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். ஜான் எப் கென்னடி மையத்தின் நிர்வாகக் குழுவுக்கு 9 புதிய உறுப்பினர்களை ஒபாமா அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில், இவர்களை தேர்வு செய்ததில் நான் பெருமைப்படுகிறேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தங்களின் அனுபவம் மற்றும் திறமைகள் மூலம் இந்த மையத்தை மேலும் சிறப்படையச் செய்வார்கள்’’

மர்ம வைரஸ் தாக்குதல் கலிபோர்னிய பூங்காவுக்கு வந்த 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு?




லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியா யோசிமைட் தேசிய பூங்காவுக்கு வந்த 10 ஆயிரம் பேர் மர்ம வைரஸ் கிருமி தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் இறக்கும் அபாயம் உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த மர்ம வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு ‘ஹென்டாவைரஸ் பல்முனரி சின்ட்ரோம்’ என்ற நோய் வருகிறது. இதுவரை நோய் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்ட 6 பேரில் இருவர் இறந்து விட்டனர். யோசிமைட் பள்ளத்தாக்கில் உள்ள இந்த பூங்கா புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும். ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, இங்குள்ள காட்டேஜ்களில் தங்குகின்றனர். இங்கு தங்கி இருந்தவர்களிடம் இந்த வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த 2900 பேருக்கு நோய் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி, குடல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். இதற்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், நோயை விரைவாக கண்டுபிடித்தால் நோயாளி காப்பாற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

சுனாமி எச்சரிக்கையால் பீதி பிலிப்பைன்சில் பயங்கர பூகம்பம்




மணிலா : பிலிப்பைன்சில் நேற்று மாலை இந்திய நேரப்படி 6.20 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் சமர் தீவின் கிழக்கே கடல்பகுதியில் 106 கி.மீ. தூரத்தில் 34.9 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவையில் நிலநடுக்கத்தின் அளவு 7.6 ஆக பதிவானது. பூகம்பத்தால் பிலிப்பைன்சில் பெரும்பாலான நகரங்கள் குலுங்கின. தெற்கு பகுதியில் உள்ள ககயான் டே ஒரோவில் சில வீடுகள் இடிந்தன. மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் நாசமானது.

ஆழ்கடலில் பூகம்பம் மையம் கொண்டிருந்ததாலும், கடல் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாலும், உடனடியாக பிலிப்பைன்ஸ், ஜப்பான் மட்டுமில்லாமல் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். பிலிப்பைன்சின் கடற்கரையோரம் வசித்த மக்கள் அனைவரும் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து பொதுமக்கள் அவசர, அவசரமாக தங்கள் குழந்தைகளுடன் மலைப்பகுதிகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். பல இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்ப பெறப்பட்டதால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..!

k



வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின்
மாமரத்தின் மருத்துவ குணங்கள்:-

சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...