Apr 23, 2012

மலர்களின் மருத்துவ குணங்கள்


மலர்களின் மருத்துவ குணங்கள்

06 Aug 2011

இப்பூவுலகெங்கும் மரம், செடி, கொடி, சமுத்திரம், மலை, பறவைகள், மனித இனம், விலங்குகள் என்பன இயற்கையில் பரிணமித்துள்ளன. இவைகள் அனைத்தையும் விட மிகவும் அழகான தோற்றத்தை தன்னகத்தே கொண்டுள்ளவைதான் மலர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. மரம், செடி, கொடிகளில் பூக்கும் மலர்களின் நிறம், அதன் மருத்துவ குணம், சுகந்தம், கவர்ச்சியான தோற்றம் என்பன இவ்வுலகில் உள்ளோரை பிரமிக்க வைக்கின்றன என்பது நிதர்சனமாகும்.


மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் கூட வீட்டுத் தோட்டங்கள், பூஞ்சோலைகள், பூங்காவனங்கள் என்பவற்றில் கோடானு கோடி பூக்கள் தினமும் மலர்வதை அவதானிக்கலாம். இதனாலன்றோ ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று இயற்கையைப் போற்றினர் நமது முன்னோர்கள்.அதேவேளை ‘எத்தனை கோடி பூமலரும்’ என்றார் கவிஞர் கண்ணதாஸன். மேலும் எமது பண்டைய இலக்கியம்கூட பெண்களை மலருக்கு ஒப்பிடுவதைக் கண்டோம். மங்கையரின் கூந்தலை அலங்காரம் செய்வதில் மலர்கள் பிரதான பங்கினை வகிக்கின்றன என்றும் கூறலாம்.

பூக்கள் நமக்கு இயற்கை நல்கிய கொடை, அவைகளில் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள், பல்வேறுபட்ட வடிவங்கள், விதம் விதமான நறுமணங்கள், மருத்துவ குணங்கள் என்று அதன் தாற்பரியங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.கண்ணுக்கு கவர்ச்சியாகவும், மனதுக்கு சாந்தியையும், கிளர்ச்சியையும் நல்குவது பூக்கள்தான் என்பது வெள்ளிடைமலை. மலர்கள் புனிதமானவை. இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடியது. மணமக்கள் கழுத்தில் மாலையாகப் பொலிவது மலர்கள் தான் என்பதையும் நாம்அறிவோம். மகரந்தங்களால் இனிக்கும் தேனை வழங்கிவருவதும் பூக்களே.

பல்வேறு சிறப்பு மிக்க அத்தகைய மலர்கள் மனித குலத்திற்கு பிணி நீக்கும் ஒளடதமாகவும் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர் என்றும் அறிய முடிகின்றது. சித்த மருத்துவ நூலை புரட்டிப் பார்த்தோமாகில் பல்வேறு வகையான மலர்களின் மருத்துவ குணங்களை சிறப்புறக் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. இன்றுகூட தென் இந்திய கிராமங்கள் சிலவற்றில் நோய்களுக்கு பூக்களை மருந்தாகப் பயன்படுத்தி எளிய முறையில் சிகிச்சை பெறுகின்றனர். இது செலவில்லா சுலப மருத்துவம் என்பது கண்கூடு.
பலகோடி மலர்கள் உலகில் உள்ளன என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம். இருப்பினும் நமது அனுபவம் மற்றும் பழக்கத்தில் உள்ள மலர்களின் மருத்துவ குணம் பற்றி அறிந்து கொள்வது இங்கு உசிதமாகும்.முதலில் நாம் தெரிவு செய்வது மருதோன்றிப் பூவாகும். மருதாணி என்ற சிறிய செடியில் கிடைப்பது மருதோன்றிப்பூ. இந்த மருதாணி இலையை மங்கையர் தங்கள் அழகிற்காக கால்களிலும், கைகளிலும், அரைத்துப் பூசுவார்கள்.

இது வண்ண வண்ண அழகையும் குளிர்ச்சியையும் தருகின்றது. மருதாணி மரத்தில் மலரும் பூக்கள் மருதோன்றிப் பூக்களாகும். இந்தப் பூக்கள் மருத்துவ தன்மை வாய்ந்தவை. மருதாணி இலைக்கு உள்ளதைப் போன்று பூக்களுக்கும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை உண்டு.மருதோன்றிப் பூவைப் படுக்கைக்கு செல்லுமுன் தலையில் வைத்துக் கொண்டால் அல்லது தலைக்கு அடியில் வைத்துக் கொண்டால் நன்றாகத் தூக்கம் வரும். குடும்பக் கவலை, தீர்க்க முடியாத பிரச்சினை, மன அலைச்சல் உள்ளவர்கள் மற்றும் ஹிஸ் யரியர் நோய் உள்ள மங்கையர் இந்தப் பூவை தலையில் சூடிக் கொணடால் நோய் அகன்றுவிடும்.
சில பெண்களுக்கு மருதோன்றிப் பூவின் மணம் பிடிப்பதில்லை. ஆகவே அவர்கள் இம்மலரைக் காய வைத்தபின் உபயோகிக்கலாம். காய வைத்த மருதோன்றிப் பூவுடன் எலுமிச்சைப் பழச் சாறு சேர்த்து தலையில் தேய்த்து ஸ்நானம் செய்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன் தலையில் உள்ள பொடுகு போய்விடும்.மற்ற மலர்களைவிட மிகவும் மாறுபட்ட நறுமணத்தைக் கொண்டது மருதோன்றிப் பூ. அடுத்து கமகமவென்று நறுமணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் மல்லிகைப் பூவைப் பார்ப்போம். மல்லிகைப் பூவை விரும்பி வைக்காத பெண்களே இல்லையெனலாம். மல்லிகையிலும் பல ரகங்கள் உள்ளன.

அவற்றை அடுக்குமல்லி, ஒற்றை மல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி, நித்திய மல்லி, காட்டுமல்லி என வகுக்கலாம். மல்லிகைப் பூவிலும் சில மருத்துவ குணம் இருப்பது பலருக்குத் தெரியாது. மல்லிகைப்பூ தலைவலியைப் போக்கும் தன்மை கொண்டது. சில பெண்களுக்கு மல்லிகையின் மணம் பிடிக்காது.
அதனை ஒவ்வாமையென்று கூறலாம். மல்லிகை மலர்கள் களைப்பைப் போக்கும் அதேவேளை மோக இச்சையையும் அதிகரிக்கும் வல்லமை கொண்டது. இதனாலன்றோ திருமணம் நடந்து முதல் இரவு அன்று கட்டிலில் மல்லிகை மலர்களைப் பரப்புவதோடு கட்டிலைச் சுற்றி மல்லிகைப் பூக்களைக் கொண்டு அலங்காரமும் மேற்கொள்கின்றனர்.

குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியினர் தொடர்ந்து மல்லிகைத் தோட்டத்தில் உலாவினால் நல்ல பலன் ஏற்பட வாய்ப்பு உண்டு. மல்லிகைப் பூவின் மணத்தை ‘காதல் மணம்’ என்று கூடச் கூறுவர். மன்மதன் – ரதி ஆகியோர் மல்லிகைத் தோட்டத்தில் தான் வசித்தார்களென்று புராணங்கள் கூறுகின்றன. மல்லிகைப் பூ தைலம் எடுக்கப்பட்டு வாசனைத் திரவியங்களில் கலந்து பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இனி எல்லோரும் விரும்பும் ரோஜா மலரின் தாற்பாரியங்கள் சிலவற்றை நோக்குவோம். பொதுவாக இதனை மலர்களின் ராஜா என்றும் அழைப்பதுண்டு. மனதுக்கு இதமான பலவித வர்ணங்களில் காட்சி தருகின்ற ரோஜாப் பூவைப் பறிப்பதற்கு கூடிய கவனம் செலுத்தியே ஆகவேண்டும். ஏனெனில் ரோஜாச் செடியில் அதிக அளவில் முட்கள் காணப்படுவதேயாகும்.

ரோஜாவை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் சுலபமாகப் போகும். குடல்புண், தொண்டைப் புண் குணமாக்குவதற்கும் ரோஜா மலர் பயன்படுத்தப்படுகின்றது.ரோஜாப் பூவின் மணம் சளியைக் குணப்படுத்தும் ஆற்றலும், வயிற்றை சுத்தமாக்கும் இயல்பும் கொண்டது. ரோஜாவிலிருந்து தைலம் எடுக்கலாம். காது வலி, காது குத்தல், காதில் ரோகம், காதுப்புண் என்பவற்றுக்கு இத்தைலம் பயன்படுத்தப்படுகின்றது. ரோஜா இதழ்களைக் கொண்டு குல்கந்து தயார் செய்யலாம்.
இதனைச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெருகும், அத்துடன் அழகான உடல் அமைப்பையும் பெறலாம். அத்துடன் குருதி சுத்தமடைந்து தோலின் நிறம் பளபளப்புடன் விளங்கும். ரோஜா இதழ்களிலிருந்து சர்பத் தயார் செய்யலாம். இதை அருந்தினால் மூலச்சூடுஇ மலச்சிக்கல் குடலில் உண்டாகும் புண் இவைகளைக் குணப்படுத்தும். வாயிலுள்ள துர்நாற்றத்தை ரோஜா இதழ்கள் போக்கும் தன்மையுடையது.

பொதுவாக தாம்பூலம் தரிக்கும் பொழுது அத்துடன் இரண்டு அல்லது மூன்று ரோஜா இதழ்களை சேர்த்துக் கொள்வது நல்லது. அது ஜீரணத்தைப் போக்கும். வீட்டு முற்றத்தில் ரோஜா செடிகளை வளர்ப்பது உத்தமம். அவற்றைப் பதியம் போட்டு பூச்சாடிகளிலும் உண்டு பண்ணலாம். அடுத்ததாக நாம் பவள மல்லிகைப் பூவை எடுத்துக் கொள்வோம். பவள மல்லிகைச்செடி மரம் வகையைச் சேர்ந்தது.

இதனை வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கோடையில் பூத்துக் குலுங்கும் இந்தமலரை ‘பாரிஜ மலர்’ என்றும் கூறுவர். ‘பாரிஜம்’ என்ற பதம் சமஸ்கிரதச் சொல்லாகும். இந்தப் பூ சுகந்தத்தைக் கொடுக்கக் கூடியது. இதன் வாசனை அலாதியானது. இந்தப் பூ மிகச் சிறிதாக இருக்கும். இவை இந்திரனின் தோட்டத்தில் காணப்பட்டன என்று ‘அமர கோசம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

இனி பவள மல்லிகைப் பூ பற்றிப் பார்ப்போம். இதனை கண் சம்பந்தமான நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.பெரும்பாலும் பெருமாள் கோயில்களில் இந்தப் பவள மல்லிகை மரங்கள் அதிகமாக இருக்கும். இதன் வாசனை ஞானத்தை அளிக்கக் கூடியது. அத்துடன் இந்த மரத்தின் கீழேதான் வாயுபுத்திரன் தவம் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தான் ஆஞ்சநேயர் சன்னதியில் பவள மல்லிகை மரம் வளர்க்கப்படுகிறது.

அடுத்து நாம் இலுப்பைப் பூவைப் பற்றி சிறிது ஆராய்வோம். இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூ இலுப்பைப் பூ ஆகும். இந்தப் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.

ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலின் உறுப்புக்கள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வது முண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
இனி தூதுவளைப் பூ பற்றிப் பார்ப்போம். தூதுவளைப் பூ

மருந்து.கொம் - ஆயுர்வேதம்

மருந்து.கொம் - ஆயுர்வேதம்

Health Benefits of Maize Corn


Indian Sweet Corn

Types of Corn – Nutrition & Health Benefits
Whenever we go out on evenings to beach or outskirts of the city first we see vendors roasting maize corns and selling them. People usually purchase and eat them for a time pass or an uncontrollable fresh aroma of the roasting maize corns. Maize corns are healthy food to eat because they are nutritious and with low calories. They contain fiber essential to control cholesterol and also an anticancer agent. Maize is eaten in several ways as corns burnt, steam cooked, as chips, corn powder and as a vegetable in the

Medicinal uses of Fig Tree


Fig tree or commonly called as ‘Medi chettu’ in Telugu is a sacred tree for Hindus. Perhaps may be due to its immense medicinal values. In Sanskrit it is called Oudumbara a common plant in Shirdi Sai Baba and Dattatreya temples. Almost all parts of the plant are of medicinal value. The tree is a perennial tree grows to a height of about 20 feet. It is commonly grows in forests and in agricultural fields. Ripened fruits are sweet and liked by children. Birds also eat these fruits. The plant can be propagated by stem cuttings and seedlings. Latex oozes from all parts of the plant. The dried stems are used

India's Best Collection

India's Best Collection

கல்யாண முருங்கை


மருத்துவக் குணங்கள்:

    கல்யாண முருங்கை தமிழமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள். மிளகுக் கொடிகளைப் படரவிட இதை வளர்ப்பார்கள். காப்பிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காக வளப்பார்கள். இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். இதன் மலர்கள் அதிக சிவப்பாக இருக்கும். இதன் இதழ்களை பெண்களின் உதடுகளுக்கு அக்காலத்தில் உவமையாக ஒப்பிடுவார்கள். உருட்டு விதைகளையும்

வாகை மரம்

ருத்துவக் குணங்கள்:

    வாகை மர‌த்‌தி‌ன் ‌பி‌சி‌ன், மர‌ப் ப‌ட்டை, பூ, ‌விதை, இலை என அனை‌த்‌தி‌ற்கு‌ம் மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன.
    வாகை‌யி‌ல் புரத‌ச் ச‌த்து, கா‌ல்‌சிய‌ம், பா‌ஸ்பர‌ஸ், சோடிய‌ம், பொ‌ட்டா‌சிய‌ம், மெ‌‌க்‌னீ‌சிய‌ம் ஆ‌கிய ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்து காண‌ப்படு‌கி‌ன்றன.
    வாகை மர‌ப்ப‌ட்டையை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து பா‌லி‌ல் கல‌ந்து குடி‌த்து வர ப‌சியை உ‌ண்டா‌க்கு‌ம். வா‌ய்‌ப்பு‌ண் குணமாகு‌ம்.
    வாகை‌ப் பூவை சேக‌ரி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி

காளான்


மருத்துவக் குணங்கள்:

    காளான் என்பது சைவ பிரியர்களின் வரப்பிரசாதம். அனைவருக்குமே ஏற்ற வகையில் இயற்கை அளித்திருக்கும் உணவு எனலாம். நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடக்கின்றன. சாதாரணமாக குப்பை கூளங்களில் வளரும் காளான்களை தவிர்த்து, நாம் உண்ணத் தகுந்த பல வகை காளான்களின் வகைகள் இதில் உள்ளன. இவை பல்வேறு இடங்களில் சிறு தொழிலாக பயிரிடப்பட்டு விற்பனைக்கு வருகின்றது. இவ்வகை காளான்களில் கிடைக்கும் உயிர் சத்துக்கள் பல்வேறு வியாதிகளை கட்டுபடுத்தவும் குணப்படுத்தவும் அறும் மருந்தாய்

துத்தி

மருத்துவக் குணங்கள்:

    துத்தி கீரை வகையைச் சேர்ந்தது. ஆனால் இதனைப் பெரும்பாலும் எவரும் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை. மற்ற கீரைகளைப் போலவே பொரியல் சமையல்செய்து சாப்பிடலாம். இது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது. இதய வடிவ இலைகளையும் அரச இலை போன்று ஓரங்களில் அரிவாள் போன்று இருக்கும். மஞ்சள் நிற சிறு பூக்களையும் தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில்

துத்தி

 

கண்டங்கத்திரி


மருத்துவக் குணங்கள்:

    கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.
    கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு

கரிசலாங்கண்ணி



மருத்துவக் குணங்கள்:

    கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
    கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது.
மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக  மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை

கள்ளிமுளையான்

மருத்துவக் குணங்கள்:

    கள்ளிமுளையான் ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை போல் குத்தாக வளரும் அடிபாகம் நாற்சதுரமாகவும் வளர, வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்துப் போல வளரும். சாம்பல், சிவப்பு நிறங்கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம் வரை வளரும். வரட்சியைத் தாங்கும். நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையாக சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில்

அல்லி


மருத்துவக் குணங்கள்:

    அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மில்லி நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
    கண்சிவப்பு, எரிச்சல், நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிந்து கண்களின் மீது வைத்து கட்டி வர நல்ல குணம் கிடைக்கும். அல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.
    வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு

அரச மரம்


மருத்துவக் குணங்கள்:

    அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.
    அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.
    குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய பலப்படுத்தக்கூடிய

ஆடாதோடை


மருத்துவக் குணங்கள்:

    மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள்.  அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
    ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.
    ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது.  இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர்.  இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.  மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
    ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும்.  எந்த வகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது.  கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...