Aug 8, 2013

இந்தியாவைத் தேடுங்கள் - கூகுள் அழைக்கிறது


கூகுள் இந்தியா நிறுவனம் அண்மையில், ‘Start Searching India’ என்னும் இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது. சென்ற ஜூலை 30 அன்று, போபால் நகரில் இது தொடங்கி வைக்கப்பட்டது. 


கூகுள் தரும் தேடல் சாதனம் மூலம், இணையத்தின் அதிக பட்ச பலனை, இணையம் பயன்படுத்துவோருக்குத் தருவதற்காக, இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
“இணையம் என்பது இப்போது படித்தவர்களும், பணி செய்பவர்களுக்கானது மட்டுமல்ல. பலதரப்பட்ட நிலைகளில் வாழ்க்கையை நடத்தி வரும் மக்களின், மாறுபட்ட தேவைகளை நிறைவேற்றி, அனைவரின் வாழ்க்கையைச் சிறப்பாக மேம்படுத்தும் ஒரு சாதனமாக மாறி வருகிறது. 
எனவே, அதற்கெனச் சிறப்பாகச் செயல்படும் வகையில் கூகுள் தன் தேடல் சாதனத்தினைச் செம்மைப் படுத்தித் தருகிறது” என, கூகுள் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் சந்தீப் மேனன் அறிவித்துள்ளார். 
மேம்படுத்தப்பட்ட தேடல் சாதனம், தேடலுக்கான முடிவுகளைத் தருவதில் செலவிடும் நேரத்தைக் குறைத்துள்ளது. 
தேடலுக்கான சரியான துல்லியமான முடிவுகளைக் காட்டுகிறது. தேடுபவரின் தேவைகளைச் சரியாகப் புரிந்து செயல்படுகிறது. 
இது தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கம்ப்யூட்டருக்கான கட்டாயப் பணிகள்


கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. 

இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

அப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.



1. கம்ப்யூட்டர், கீபோர்ட், மானிட்டர் திரை: 
உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரைச் சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கம்ப்யூட்டர் சிபியுவில் புகுந்து, உள்ளே வெப்பத்தினைத் தணிக்க இயங்கும் மின் விசிறிகளின் செயல்திறனைக் குறைக்கும். 
இதனால், கம்ப்யூட்டரின் செயல் திறனும் குறையும். சுத்தப்படுத்துவதற்கான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, மின் இணைப்பிலிருந்து நீக்கி, ஸ்குரூக்களை நிதானமாகக் கழற்றி, உள்ளே சேர்ந்திருக்கும் தூசியையும், அழுக்கையும் அகற்றவும். 
உள்ளே மின்விசிறியிலும், வெளியே வெப்பம் வெளியேறும் துவாரங்களிலும் நிச்சயம்


இணையத்தில் இணையும் ஒவ்வொரு டிஜிட்டல் சாதனத்திற்கும், அதனை அடையாளம் காட்டும் வகையில் இன்டர்நெட் புரோட்டோகால் முகவரி (IP Internet Protocol Address) தரப்படுகிறது. 

இது உங்களுக்கு மட்டுமேயான நிலையான முகவரியாக இருக்கலாம். அல்லது அவ்வப்போது மாறும் வகையிலான முகவரி யாகவும் இருக்கலாம். ஒவ்வொரு முறை நீங்கள் இணையத்தில் இணைகையில், இந்த முகவரி மாற்றிக் கொடுக்கப்படும். 

இணையத்தில் செயலாற்ற, ஓர் இணைய முகவரி அவசியம் தேவை. இது உங்களின் முகவரி அல்ல; நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் முகவரி. எப்படி உங்கள் வீட்டினை, வீட்டு முகவரி, பல்லாயிரக்கணக்கான வீடுகளின் நடுவே, அடையாளம் காட்டுகிறதோ, அதே போல, ஐ.பி. முகவரி, இணையத்தில் உங்கள் கம்ப்யூட்டரை அடையாளம் காட்டுகிறது. 
இந்த முகவரி இருந்தால் தான், ஒரு வெப் சர்வர், தன்னிடம் உள்ள இணையப் பக்கத்தினை, உங்கள் விருப்பத்தின் பேரில், உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்ப முடியும். இந்த முகவரியினை வைத்து, உங்களுடைய தனிப்பட்ட தனிநபர் தகவல்களைப் பெற முடியாது என்றாலும், உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனம், உங்கள் முகவரியுடன், உங்கள் பெயர், முகவரி, கிரெடிட் கார்ட் எண் போன்ற பெர்சனல் தகவல்களை தொடர்புபடுத்த இயலும்.
இதனால், பதற்றமடைய வேண்டாம். ஒவ்வொரு இணைய சேவை நிறுவனமும் தங்களுக்கென பெர்சனல் தகவல் குறித்த கொள்கைப் பிடிப்பைக் கொண்டிருக்கின்றன. உங்கள் பெர்சனல் தகவல்களை அவை தெரிந்து கொண்டாலும், அவற்றை வெளியிடாது.
குக்கி பைல்கள் (Cookies) உங்களுடைய இணைய பழக்க வழக்கங்களைக் கண்டறிவதற்காக

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் Safe Mode







விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நமக்குப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம், நமக்கு ஆபத்தில் உதவும் நண்பனாக வருவது சேப் மோட் எனப்படும் பாதுகாப்பான இயக்க முறை ஆகும். 

இதன் மூலம், சிஸ்டம் இயங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை, விண்டோஸ் இயக்கத்திலா அல்லது அப்ளிகேஷன் புரோகிராமிலா என்பதை நாம் அறிய முடியும். 

விண்டோஸ் 8 கொண்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை சேப் மோடில் பூட் செய்வது, முந்தைய சிஸ்டங்களில் மேற்கொண்டதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், இந்த சிஸ்டத்திலும் சேப் மோடில் பூட் செய்திடலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
உங்களுடைய கம்ப்யூட்டர் சரியாக ஷட் டவுண் ஆகவில்லை என்றாலோ, அல்லது, பூட் ஆக மறுத்தாலோ, சேப் மோட் இயக்கம் தான் உங்களுக்கு உதவும். சேப் மோடில், விண்டோஸ் சில குறிப்பிட்ட பைல்கள் மற்றும் ட்ரைவர்களுடன் இயங்கத் தொடங்கும். 
எந்த புரோகிராமும், சேப் மோடில், தானாக இயங்கத் தொடங்காது. உங்களுடைய கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணையாது. இதனால், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டருக்குப் பரவும் வாய்ப்பு இல்லை.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...