Jan 10, 2013

25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகிறது! கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Kamal_vishwarupam 25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகிறது! கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!





  • 1
     

கமல்- தியேட்டர் உரிமையாளர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகிற 25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகும் என கமல் அறிவித்துள்ளார்.
கமல் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம்.
இப்படத்தில் கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
எப்பவும் புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் விரும்பும் கமல் இந்த படத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல புதுமைகளை புகுத்தியுள்ளா‌ர். மேலும் இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும்

முட்டையில் இருக்கும் 10 விதமான நன்மைகள்!





  • 0
     
சமையலறையில் பயன்படும் பொருட்களில் முட்டையும் ஒன்று. அந்த முட்டை சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று தெரியும்.
ஆனால் அந்த முட்டை சமைப்பதற்கு மட்டுமின்றி, பல வழிகளில் பயன்படுகிறது. அதிலும் இந்த முட்டையை வைத்து வீட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வையும் காண முடியும்.
1. முட்டையின் வெள்ளைக் கருவை பசையாகப் பயன்படுத்தலாம். இது சற்று ஓரளவு நாற்றத்துடன் தான் இருக்கும். ஆனால் இவற்றை வைத்து ஒட்டினால் நன்கு ஒட்டிக் கொள்ளும்.
2. சமையலறையில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு முட்டையின் ஒட்டை அறையின் மூலைகளில் வைத்து விட்டால் அவை வராமல் தடுக்கலாம்.
3. முட்டையை சமைத்து சாப்பிட்டப் பின்பு, அதன் ஓட்டை தூக்கிப் போட்டு

அயலவர்களால் மரத்தில் காயப் போடப்பட்ட கார்

அயலவர்களால் மரத்தில் காயப் போடப்பட்ட கார்





  • 0
     
வாலிபர் ஒருவரின் கார், அவரது அயலவர்களினால் மரத்தில் காயப்போடப்பட்டது. என்ன குழப்பமாக இருக்கிறதா?
போலன்ட் இல் வசித்து வருபவர் 24 வயதாகும் Zbigniew Filo. இவர் கட்டுப்பாடு இன்றி மிக மோசமான முறையில் காரை வேகமாக செலுத்தும் பழக்கம் உள்ளவர். இதனால் அப்பகுதியில் சில விபத்துக்களுக்கு காரணமாகவும் இருந்துள்ளார்.
இவரை இவரது அயலவர்கள் பலமுறை எச்சரித்து இருக்கிறார்கள். ஆனால் அதனை பொருட்படுத்தாத Zbigniew Filo, தொடர்ந்தும் மோசமான முறையிலேயே காரை ஓட்டி வந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அயலவர்கள் பாரம் தூக்கி உதவியுடன் Zbigniew Filo இன் காரை மரத்தின் கிளையின் உச்சியில் தொங்கவிட்டு விட்டனர்.
பொலீசாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பெயரில் அவர்கள் வந்து அயலவர்களிடம் சமரச பேச்சு நடாத்தினார்கள்.
இனிமேல் மோசமாக கார் ஓட்டமாட்டேன் என்று Zbigniew Filo உறுதியளித்த பின்னரே கார் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை!

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை




  • 3
     

sachin_facebook_1சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சினை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேஸ்புக்கில் இணைந்தார், இதில் தன்னுடைய கருத்துகளை வீடியோ மூலமாகவும் தெரிவித்து வந்தார்.
முதன் முதலாக பேஸ்புக் கணக்கை தொடங்கிய சச்சின், எனது பேஸ்புக்கிற்கு அனைவரையும் வரவேற்கிறேன், இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது என் சிறுவயது கனவு.
கடந்த 22 ஆண்டுகளாக உலக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதும் கனவு தான், உங்களின் ஆதரவில்லாமல் இதுவெல்லாம் நடந்திருக்காது. இந்த வாய்ப்பை கொடுத்த கடவுள், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...