Feb 3, 2013

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா : 1000 கலைஞர்கள் பங்குகொண்ட பஞ்சரத்ன கீர்த்தனை



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் 166வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நேற்று திருவையாற்றில் சுமார் 1000 இசைக்கலைஞர்கள் பங்குகொண்ட பஞ்சரத்ன கீர்த்தனை இசை விருந்து கண்கவர் நிகழ்வாக நடைபெற்றுள்ளது.
 ஆண்டுதோறும் நடத்தபப்டும் தியாகராஜர் ஆராதனை விழா கடந்த ஐந்து நாட்களாக திருவையாறில் நடைபெற்று வந்தது. நேற்று தியாகராஜர் சுவாமிகளின் முக்தி தினம் என்பதனால், பிரதான நிகழ்வாக பஞ்சரத்ன கீர்த்தனைகள் இடம்பெற்றன. சுமார் 100க்கு மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் கீர்த்தனைகள் பாடி இசைத்தனர். பிரபல பின்னணி பாடகர்கள் யேசுதாஸ், விஜய் யேசுதாஸ், சீர்காழி சிவசிதம்பரம், உன்னி கிருஷ்ணன், சுதா ரகுநாதன் ஆகியோரும் இசைக்கலைஞர்கள், மகதி, அருண், சுமா சுசித்ரா, கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, பிரியா சகோதரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் தியாகராஜர் சுவாமிகள், தெலுங்கு மொழியில் எண்ணற்ற கீர்த்தனைகள் இயற்றினார். அதில் பஞ்சரத்ன கீர்த்தனை புகழ்பெற்றது.

விஞ்ஞானத் துறையில் ஒபாமாவிடம் விருது வாங்கிய இந்தியர்


விஞ்ஞானத் துறையில் ஒபாமாவிடம் விருது வாங்கிய இந்தியர்

இந்தியாவைச் சேர்ந்த ரங்கசாமி சிறினிவாசன் எனும் விஞ்ஞானிக்குச் சமீபத்தில் அமெரிக்காவின் விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் புதுமைக்கான தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
இவருடன் சேர்த்து இன்னமும் 22 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த விருதையளித்துக் கௌரவித்தவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

82 வயதாகும் சிறினிவாசன் IBM இன் தோமஸ் ஜே வத்சன் ஆய்வு கூடத்தில் தனது நண்பரான சாமுவேல்

உள்ளங்கை அளவே உள்ள இங்கிலாந்தின் நவீன உளவு விமானம்



உள்ளங்கை அளவே உள்ள இங்கிலாந்தின் நவீன உளவு விமானம்
லண்டன், பிப். 4- 

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களுக்கு எதிரான போரில், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் உளவு விமானத்தை ஈடுபடுத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 8 அங்குல நீளம் கொண்ட இந்த உளவு விமானத்தின் எடை வெறும் 15 கிராம் தான். 

விமானத்தின் மூக்கு பகுதியில் உள்ள சக்திவாய்ந்த 3 கேமராக்கள், எதிரியின் இலக்கை வெகு துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். ஜி.பி.எஸ். கருவி மற்றும் 'ஜாய் ஸ்டிக்' உதவியுடன் இயங்கும் இந்த உளவு விமானத்துக்கு 'பிளாக் ஹார்னட்' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த விமானம் எதிரி இலக்கின் மீது பறக்கும் போது யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஓசையை கூட கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவில் வீடுகட்டும் முயற்சி : முப்பரிமாணப் படங்கள் வெளியீடு!



நிலவின் தரையில் காணப்படும் மூலப் பொருட்களைக் கொண்டே அங்கு எதிர்காலத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள கட்டடங்களின் முப்பரிமாண வடிவமைப்பு படங்களைப் பொறியியல் ஊக்குவிப்பாளர்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதாவது முதலில் பூமியில் இருந்து இக்கட்டடங்களின் கட்டமைப்பு நிலவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 3D பிரிண்டர்கள் மூலம் பெறப்பட்ட ஷெல் (Shell) மூலம் வடிவமைக்கப் படவுள்ளது.

இந்த 3D பிரிண்டர்கள் நிலவில் ரோபோட்டுக்கள் மூலம் இயக்கப் படவுள்ளதுடன், இவை ரெகொலித் (regolith) என அழைக்கப்படும் நிலவில் உள்ள மண்ணைப் பயன்படுத்தி கட்டமைப்பைச் சுற்றியுள்ள cover ஐயும் ஆக்கவுள்ளன. இக்கட்டடம் அமைப்பதற்கு நிலவின் தென் முனையில் உள்ள துருவப் பகுதி மும்மொழியப் பட்டுள்ளது. மேலும் வருங்காலத்தில் நிலவில் தங்கி விண்வெளி ஆராய்ச்சி செய்யக் கூடிய குறைந்தது 4 விண்வெளி வீரர்களுக்கான வீடாக இக்கட்டடங்கள் ஆரம்பத்தில் பயன்படுவதுடன் இது மேலும் விரிவு படுத்தப் படலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிலவில் உள்ள செயற்கை regolith மண் சிலிக்கன், அலுமினியம், கல்சியம், இரும்பு மற்றும் மக்னீசியம் ஒக்ஸைட்டு ஆகிய மூலகங்களைக் கொண்டிருப்பதுடன் இவை 3D பிரிண்டர்கள் மூலம் உபயோகப் படுத்தப் பட்டு திண்ம நிலையிலான கட்டமைப்புக்களை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். இச் செயற்திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமான ESA உம் பங்களிப்புச் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வருங்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் 3D பிரிண்டர்களின் தொழிநுட்ப உதவியுடன் சந்திரன் மற்றும் வேற்றுக்கிரகங்களில் கட்டட நிர்மாணங்கள் மேற்கொள்ளப் படவுள்ளது என்பதுடன் இது மிகவும் பிரயோசனம் மிக்க வளர்ந்து வரும் துறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் வெளியான டேப்லெட் கணினிகள்






கடந்த மாதம் 2013ன் ஆரம்பம் என்பதால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களது டேப்லெட் கணினிகளை இந்தியாவில்சந்தைப்படுத்தின. விலையுயர்ந்த, சாதாரண விலையுடைய டேப்லெட்களும் விற்பனைக்கு வந்தன.
எந்தெந்த டேப்லெட்கள் கடந்த மாதம் வெளியானது மற்றும் அவற்றின் நுட்பக்கூறுகள் ஆகியவற்றின் விவரங்களை கீழேவிரிவாகக்கொடுத்துள்ளோம்.

மதுரை திடீர் நகரில் பயங்கர தீவிபத்து - 200 கடைகள் எரிந்து சாம்பல் - பல கோடி சேத


 More Than 200 Shops Gutted Madurai Fire Accident ம் மதுரை: மதுரை திடீர் நகர் பகுதியில் இன்று அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 200 மரக் கடைகள் தீயில் கருகி சாம்பலாயின. ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இந்த தீவிபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே திடீர் நகரில் முத்துப்பாலத்தின் கீழே நாயடிசந்தை பகுதி உள்ளது. இங்கு 200 மரக்கடைகள், இரும்பு கடைகள் உள்ளிட்ட 400க்கும் அதிகமான கடைகள் உள்ளன. கட்டிடங்களுக்கு தேவையான நிலை, கதவு, ஜன்னல்கள், சட்டங்கள் உள்ளிட்ட மரச்சாமான்கள் வாங்க தென் மாவட்ட மக்கள் இங்கு வருகின்றனர். பழைய ரெடிமேடு மரப்பொருட்களும் அதிகளவில் இங்கு விற்கப்படுகின்றன. மரங்களுக்கான பூ வேலைப்பாடுகளையும் தொழிலாளர்கள் செய்து

திருமதி பரமேஸ்வரி இரத்தினசபாபதி

திருமதி பரமேஸ்வரி இரத்தினசபாபதி

இளமைக் காலத்தை மகிழ்ச்சியாக கழிக்காதவர்களை இதய நோய் தாக்கும்!

இளமைக் காலத்தை மகிழ்ச்சியாக கழிக்காதவர்களை இதய நோய் தாக்கும்!


February 3, 2013  10:40 am
இளமைக் காலத்தை மகிழ்ச்சிகரமானதாக கழிக்காத பொரும்பாலானோர் பிற்காலத்தில் இதய நோய்களுக்கு உட்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அமெரிக்கா ஆய்வாளர்கள் இந்த தகவல்களினை வெளியிட்டுள்ளனர். இத்தகைய இதய நோய்த்தாக்கம் பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

337 பேரை கொண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

ஏழு வயதில் உளவியல் ரீதியாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் இதய நோய்த் தாக்கத்திற்கு உட்படுதல் நூற்றுக்கு 31 வீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான ஆண்கள் இதய நோய்த்தாக்கத்திற்கு உட்படுதல் நூற்றுக்கு 17 வீதமாகவும் உள்ளது.

நான்கு புறமும் திரும்பும் ஆந்தையின் கழுத்தின் இரகசியம் - கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்!

News Service ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு, அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை, தன் கழுத்தை, 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது. இதே அளவுக்கு மனிதன் தன் கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின், "ஜான்ஸ் ஹாப்கின்' பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர்.
  
இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில், தாடை எலும்புக்கு சற்று கீழே உள்ள ரத்த நாளங்கள் விரிவடைவது தெரியவந்தது.இதன் மூலம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...