Oct 30, 2012

சர்வதேச விண்வெளி கூடத்துக்கு சென்ற தனியார் விண்கலம் தரை இறங்கியது



சர்வதேச விண்வெளி கூடத்துக்கு சென்ற தனியார் விண்கலம் தரை இறங்கியது
நியூயார்க், அக். 30-
அமெரிக்கா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கான கட்டுமான பொருள் மற்றும் அங்கு தங்கியிருக்கும் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்களை அமெரிக்காவின் என்டீவர் விண்கலம் மூலம் அனுப்பி வந்தனர். ஆனால் அந்த விண்கலம் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றது.
எனவே, தனியார் நிறுவனத்தின் விண்கலம் மூலம் அவற்றை சமீபத்தில் அனுப்பி வைத்தனர். ஆளில்லாமல் இயங்கும் அந்த விண்கலம் பொருட்களை ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளிக்கு சென்றது. பின்னர் அங்கு பொருட்களை இறக்கிவிட்டு திட்டமிட்டபடி 18 நாட்கள் கழித்து நேற்று அமெரிக்காவின் பசிபிக் கடலில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதை நீர்மூழ்கி வீரர்கள் குழு பத்திரமாக மீட்டது.

அப்பிளின் சரிவு ஆரம்பம்?


 
By Kavinthan Shanmugarajah
2012-10-30 14:12:57

 
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள்.
 
ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.
 
இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும்.
 
அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி

கரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி நகர்கிறது



காரின் மீது விழுந்து கிடக்கும் மரம்
அமெரிக்காவின் வட கிழக்கு பிரதேசத்தை "சாண்டி" என்று பெயரிடப்பட்டுள்ள மாபெரும் சூறாவளி தாக்கியதில் இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலே பத்து உயிரிழப்புகள் நியுயார்க்கில் நிகழ்ந்துள்ளது.
பல ஆண்டுகளில் இல்லாத பெரும் சூறாவளி கரையோரப் பகுதிகளைத் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு தற்போது நிலப்பரப்புக்குள்ளும் தொடர்ந்து வீசிக்கொண்டுள்ளது.

சான்டி: அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இயற்கைத் துயரம்!

சான்டி: அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய இயற்கைத் துயரம்! 

News Serviceஅமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்கள் மின்சாரம் இன்றி இருளிலேயே பல நாட்களாக மூழ்கிக் கிடக்கிறது! அமெரிக்காவை தாக்கி வரும் சான்டி புயல்தான் அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப் பெரிய இயற்கை துயரமாக உருவெடுத்திருக்கிறது.
  
சான்டியால் ஒவ்வொரு அமெரிக்க மாகாணமுமே புரட்டிப் போடப்பட்டு வருகிறது. வாஷிங்டன், பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க், போஸ்டன் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்த சான்டி புயலின் கோரத்தாண்டவத்தால் சுமார் 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
சான்டி புயல் இலக்கு வைத்திருக்கும் நகரங்கள் பலவற்றிலும் மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்படவில்லை. மருத்துவமனைகளில் பேக்அப் மின்சாரமும் இல்லை. இதனால் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மன்ஹாட்டனில் 13 அடி உயர சுவர் கூட இந்தப் புயலுக்கு தப்பவில்லை. அமெரிக்க நகரங்கள் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அமெரிக்கா முழுவதும் சுமார் 5.7 மில்லியன் பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 7ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. பல விமான நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. இதே நிலைமைதான் ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கும்! சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன! சான்டி புயல் பல இடங்களில் பனிமழையையும் கொண்டு வந்திருக்கிறது கடந்த ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய ஐரீன் புயல் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...