Jan 6, 2013

வெங்காயம் இருக்க பயமேன்!

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது வெங்காயம். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.

  • சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.
    1.வெந்தையம் – 50 கி
    2.கருஞ்சீரகம் – 25 கி
    3.ஓமம் – 25 கி
    4.சீரகம் – 25 கி

  •  இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்த பின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

    தினமும் காலை சிறிய ஸ்பூன்-ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

    ஒரு வாரத்திற்கு பின் சுகர் சோதித்து பார்த்துக் கொள்ளவும்.

அமெரிக்க அதிபராக ஒபாமா 20ஆம் தேதி பதவியேற்பு


அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர் குழு வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. அப்போது, ஓஹையோவில் பதிவான வாக்குகள் தொடர்பான சான்றிதழை அந்த மாகாண அவைத் தலைவர் ஜான் போய்னரிடம் காட்டுகிறார் துணை அதிபர் ஜோ பிடன் (இடது).

First Published : 05 January 2013
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா இம்மாதம் 20ஆம் தேதி பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. ஒவ்வொரு மாகாணத்திலும் வெற்றி பெற்ற வாக்காளர் குழு (எலக்டோரல் காலேஜ்) உறுப்பினர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். அந்த முடிவுகளை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த

வரலாறு காணாத குளிர் : சீனாவில் கடல் உறைந்தது


ஷாங்காய்: சீனாவில் 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. கடல் நீர் உறைந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கித்தவிக்கின்றன. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் 3.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. இது கடந்த ஆண்டை விட 1.3 டிகிரி குறைவு, 28 ஆண்டுகளில் குறைந்தபட்ச வெப்பநிலை என்று சீன வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடும் குளிர் காரணமாக ஷான்டாங் மாகாணம் லெய்ஜோ வளைகுடாவில் கடல் நீர் உறைந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் நகர முடியாமல் சிக்கியுள்ளன. கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் மத்திய ஹுனான் மாகாணத்தில் 140 விமானங்கள் தாமதம் அடைந்தன.

அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம்





ஜுனியா: அலாஸ்கா அருகே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அலாஸ்காவின் தெற்குப் பகுதி மற்றும் கனடாவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் 7.6 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு இருந்தது. கிரேய்க் பகுதிக்கு மேற்கே 97 கி.மீ தொலைவில் பசிபிக் கடலில் 9 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக கார்டோவ் நகருக்கு தென்கிழக்கே 121 கி.மீ தொலைவில் தொடங்கி வான்கூவர் தீவின் வடக்கு முனை வரை சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...