Aug 19, 2012

சீன மாணவி உலக அழகியாக தேர்வு!


சீனாவை சேர்ந்த 23 வயது மாணவி 2012ம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இறுதிச்சுற்றில் இடம் பிடித்த இந்திய அழகிக்கு சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.

2012-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி, சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.  இறுதிப் போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த 23 வயது வென் ஜியா யு, உலக அழகிப்பட்டத்தை தட்டிச்சென்றார்.


கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இவியான் சர்கோஸ், வென் ஜியாவுக்கு உலக அழகி பட்டத்துக்கான கிரீடத்தை சூட்டினார்.

கரு நீள கூந்தல் வேண்டுமா? கையில மருந்திருக்கு!

கார் கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகுதான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் சந்தையில் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
இயற்கை மருத்துவம்
ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
சைவத் தமிழ் மக்கள்; தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும், ஆராத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.
சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும் இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள். அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் இலக்குமி வாசம் செய்வாள் (வருகை தருவாள்) என்பதும்

முகப்பரு, தழும்பு மாற…

உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும். நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது.
இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு, இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம்.

முதலிடத்தை நோக்கி அசின்?

. மிகச்சாதாரண தோற்றம் கொண்டவர் அசின். அவரால் பாலிவுட் கடலில் நீந்தமுடியுமா என்று வட இந்திய மீடியாக்களால் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் தற்போது நிலமையே தலைகீழ்! பாலிவுட்டின் இரண்டாவது பெரிய நாயகி என்று அதே மீடியாக்கள் அவரை புகழ்கின்றன. அசின் கடந்த ஆண்டு  நடித்த ‘போல்பச்சன்’ படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே அவர் நடித்த ‘கஜினி’, ரெடி’,‘ஹவுஸ்புல்-2’ படங்களும்  100 கோடிக்கு மேல் வசூலித்தன. இதனால் முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு அதிரடியாக உயர்ந்து விட்டார் அசின்!


அத்திப்பழம் ஆரோக்கியமான அழகை தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனை கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...