Sep 15, 2012

யாஹூவின் புதிய சிஇஒவாக முன்னாள் கூகுள் துணைத் தலைவர் மரிஸா மேயர் நியமனம்

 Marissa Mayer Is The New Ceo Yahoo
சன்னிவேல்: யாஹூ இணைய தளத்தின் முதன்மை செயல் அதிகாரியாக மரிஸா மேயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுநாள்வரை கூகுள் தேடுதளத்தின் துணைத்தலைவராக இருந்த அவர் இன்று முதல் யாஹூவின் சி.இ.ஒ வாக பணியை தொடங்குகிறார்.
1999ம் ஆண்டு கூகுளின் முதல் பெண்

கூகுள் முன்னாள் சிஈஓ சம்பளம் 1 மில்லியன் டாலரிலிருந்து 1.25 மில்லியன் டாலராக உயர்ந்தது!


.
 Google Ex Ceo Eric Schmidt Salary Rises 1 25 Dollar Aid0216வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் தற்போதைய செயல் தலைவருமான எரிக் ஸ்மித்தின் ஆண்டு ஊதியமானது 1 மில்லியன் டாலரில் இருந்து 1.25 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2010-ம் ஆண்டில் அவர் 1 மில்லியன் டாலர் பெற்றிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டில் 1.25 மில்லியன் டாலர் அவருக்கு கிடைத்தது.

கூகுள் நிறுவனத்தில் ஸ்மித்துக்கு அடுத்த நிலையில் ஊதியம் பெறுவோரைவிட இது 4 மடங்கு அதிக உயர்வு. கூகுளின் மற்றொரு நிறுவனரான லர்ரி பேஸ் இப்பொழுது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். அதேபோல் நிறுவனர்களில் மற்றொருவர் செர்ஜி பெயின். இருவரும் பெறும் தொகையைவிட இது கூடுதலாகும். இருவரும் தமது சொத்துகளின் பெரும்பகுதியை நேரடியாக கூகுளின் பங்குகளில் இணைத்திருக்கின்றனர்.

ஸ்மித் பொறுப்பேற்ற பிறகு கூகுள் தேடுதளமானது முன்னைவிட கூடுதல் மதிப்பைப் பெற்றுள்ளது. அவரால் தோராயமாக 38 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை கடந்த ஆண்டு உருவாக்க முடிந்திருக்கிறது.

ஸ்மித்துக்கு அடுத்ததாக கூகுள் நிறுவனத்தில் கூடுதல் ஊதியம் பெறுபவர் வர்த்தக நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரி நிகேஷ் அரோரா. 2010-ம் ஆண்டு 22.6 மில்லியன் டாலர் பெற்றிருந்த அவர் கடந்த ஆண்டு 23.2 மில்லியன் டாலரைப் பெற்றிருக்கிறார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...