May 2, 2013

அமாவாசை கழித்து வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர்


| :



                  மாவாசை கழித்து வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதத்தில் வரும் திரிதியை திதி மிகச் சிறப்பானது. இதனைதான் "அட்சய திரிதியை' என்பர். அட்சயம் என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது. இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான- தர்மங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பர்.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சய திரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.

இந்த அற்புதமான திருநாளில்தான் குசேலன் தன் பால்ய குரு குல நண்பனான கண்ணபிரானைச் சந்தித்து தன் வறுமையைப் போக்கிக் கொண்டான். குபேரன் சங்கநிதி, பதும நிதியை போன்ற நிதிகளைப் பெற்றான். பாண்டவர்கள் தங்களின் வனவாசத்தின்போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்றனர். இது மணிமேகலை பெற்ற அட்சய பாத்திரம் போன்றது. எடுக்க எடுக்க குறையாமல் உணவு வழங்கும் பாத்திரம்தான் இது. வனவாசத்திற்கு இதுதான் பெரிதும் பாண்டவர்களுக்குப் பயன்பட்டது.

இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக்கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் "அட்சய' என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.

வட இந்தியாவில் இந்நாளை "அகஜித்' என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.

எனவே, அட்சயதிரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தான- தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல்நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.















அட்சய திரிதியை: நெருங்கியாச்சு

Temple images
அட்சய திரிதியை: நெருங்கியாச்சு மினி தீபாவளி!

அட்சயதிரிதியை மே 13ல் வருகிறது. இந்த நாளில் ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என இப்போதே திட்டமிடல் நடந்து கொண்டிருக்கிறது. நகை, பிரிட்ஜ், ஏசி, டிவி, துணிமணிகள் என குழந்தை முதல் பெரியவர் வரை மினி தீபாவளியாகவே இந்த நாளைக் கருதுகின்றனர். திட்டமிடல் என்பது வாழ்க்கையில் பெரிய விஷயம். அந்த வழக்கத்தை இந்த திருவிழா நம் மத்தியில் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக, இந்த நாளுக்காக பணத்தை சேமிக்க துவங்கி விட்டார்கள் பலர். அதாவது சுக்கிரதிசை தேடி வருகிறது.  சரி...சுக்கிரதிசை என்கிறார்களே! அப்படியென்றால் என்ன!
யார் கையிலாவது நாலு காசு புழங்கினால் போதும்! அவனுக்கென்னப்பா!

தக்காளி ஸ்குவாஷ்.

தக்காளி ஸ்குவாஷ்.
தேவையான பொருட்கள்:
நன்றாக பழுத்த தக்காளி -1 1/2 கிலோ.
தக்காளியை வேக வைத்து ஆறியவுடன் மிக்சியில் அடித்து வடி கட்டவும்.
ஒரு லிட்டர் ஜுஸ் இருந்தால் ஒன்றரை கிலோ சீனி, ஒரு லிட்டர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட் மூன்றையும் சேர்த்து பாகு தயாரித்து ஆற வைத்து, தக்காளி ஜூஸுடன் கலக்கவும்.
டொமேடொ ரெட் கலரை தண்ணீரில் கரைத்து, 3/4 தேக்கரண்டி ‘சோடியம் பென்சோயேட்’ சேர்த்து பாட்டிலில் நிரப்பவும். லஸ்ஸி.
நான்கு கப் கெட்டித் தயிரில் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு,மற்றும் எட்டு தேக்கரண்டி சீனி போடவும்.
இதனை மிக்சியிலிட்டு ஐஸ் கட்டிகளும் போட்டு  நுரை வரும் வரை அடிக்கவும்.
இதனை உடனே குடிக்க வேண்டும். லெமன் க்ரஷ்.
ஒரு லிட்டர் எலுமிச்சை சாறு இருந்தால் இரண்டு கிலோ சீனி, ஒரு லிட்டர் தண்ணீர், சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து பாகு தயாரிக்கவும்.
பாகு ஆறிய பின்பு  பழச் சாறு , லெமன் எசென்ஸ் 4 தேக்கரண்டி, சிறிதளவு லெமன் மஞ்சள் கலர் பவுடர்,  தண்ணீரில் கரைத்த 3/4 தேக்கரண்டி ‘பொட்டாசியம் மெடா பை சல்பைடு’ சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.
லெமன் பார்லி ஸ்குவாஷ்.
எலுமிச்சை பழச் சாறு 1 லிட்டர் இருந்தால் பார்லி மாவு 3 தேக்கரண்டி எடுத்து, கட்டி தட்டாமல் சிறிது  தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
1.6 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அத்துடன் கரைத்து வைத்திருக்கும் பார்லி மாவை கலக்கவும்.
மாவு வெந்த பின்பு 1.4 கிலோசீனி சேர்த்து, சீனி கரைந்ததும்சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாறு கலந்து வடி கட்டவும்.
பாகு நன்றாக ஆறியவுடன் பழச்சாறு, 2தேக்கரண்டி லெமன் எசென்ஸ், சிறிது தண்ணீரில் கரைத்த முக்கால் தேக்கரண்டி ‘பொட்டாசியம் மெடா பை சல்பைடு’  என்ற மருந்து மூன்றையும் சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.

குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.


சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.

உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...